PDF chapter test TRY NOW
I. இணைப்புத் திசு
இருப்பிடம்
- இந்த வகை திசு அதிக அளவில் நிறைந்து பரவலாகக் காணப்படும்.
பணி
- உறுப்புகளை உருவாக்கும் பல வகைத் திசுக்களுக்கு கட்டமைப்பையும், ஆதரவையும் தருகிறது.
- உடல் அசைவுகளின் மூலம் ஏற்படும் உறுப்புகள் இடம் பெயர்தலை இணைப்புத் திசு தடுக்கிறது.
- மேட்ரிக்ஸ் எனப்படும் செல்லிடை பொருட்கள், செல்கள் மற்றும் நார்கள் இணைப்புத் திசுவின் கூறுகளாகும்.
இணைப்புத் திசுக்கள் நான்கு விதமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. அவை,
- முறையான இணைப்புத் திசு (சிற்றிடவிழையம் மற்றும் கொழுப்புத் திசு)
- ஆதார இணைப்புத் திசு (குருத்தெலும்பு மற்றும் எலும்பு)
- அடர்த்தியான இணைப்புத் திசு (தசை நாண்கள் மற்றும் தசை நார்கள்)
- திரவ இணைப்புத் திசு (இரத்தம் மற்றும் நிணநீர்)
1. முறையான இணைப்புத் திசு
இத்திசு வகை மூன்று இழைககளைக் கொண்டது அவை:
- கொலாஜன் இழைகள்
- நீட்சி இழைகள்
- ஃபைப்ரோ பிளாஸ்ட் இழைகள்
மேலும், இது இரு வகைப்படும். அவை பின்வருமாறு,
i. சிற்றிட விழையம்
சிற்றிட விழையம் அல்லது ஏரியோலர் திசு
அமைப்பு
- மேட்ரிக்ஸ் எனப்படும் அரைதிரவ தளப் பொருளில் தளர்வாக அமைந்த செல்கள் மற்றும் நார்களைக் கொண்டது. இந்த தளம், வலைப்பின்னல் போல, நுண் இழைகளை குறுக்கும் நெடுக்குமாக கொண்டிருக்கும். இடையில் சிறிய இடைவெளிக் கொண்ட அமைப்பு உள்ளது.
இருப்பிடம்
- உறுப்புகளின் உட்பகுதி உள்ள இடைவெளியை நிரப்புகிறது. தசை, இரத்த நாளங்கள் மற்றும் நரம்புகளைச் சுற்றியும் உள்ளது.
பணி
- தோலைத் தசையுடன் இணைக்கிறது, காயமடைந்தத் திசுக்களைப் பழுதுப் பார்க்கிறது மற்றும் தோலை அடித்தளத் தசையுடன் சேர்க்கிறது.
ii. கொழுப்புத் திசு
கொழுப்புத் திசு அல்லது அடிப்போசைட் திசு
அமைப்பு
- அடிப்போசைட் (அ) கொழுப்பு செல்களின் திரட்டு. கொழுப்பு செல் கோள அல்லது முட்டை வடிவம் மற்றும் பெரிய கொழுப்புத்துளி கொண்டுள்ளது.
இருப்பிடம்
- இதயம் மற்றும் சிறுநீரகம், உள் உறுப்புகளுக்கு இடையில் மற்றும் தோலுக்கு அடியிலும் காணப்படும்.
பணி
- கொழுப்பு சேமிப்பிடம், சிறுநீரகம், கருவிழிகளை அதிர்ச்சியிலிருந்தும் மற்றும் அதிர்ச்சி உறிஞ்சிகளாகவும், மற்றும் பாதுகாப்பான உறை போல செயல்படுவதன் மூலம் உடலின் வெப்பநிலையை சீராக வைக்கின்றன.