
PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoபால்மம் என்பது ஒன்றுடன் ஒன்று கலவாத இரண்டு திரவங்களைச் சேர்ப்பதினால் உருவாகும் ஒரு சிறப்பு வகையான கலவை ஆகும்.
இது இயல்பாகவே கலப்பதில்லை. பால்மம் என்பது லத்தீன் வார்த்தையிலிருந்து பெறப்பட்டதாகும். இதன் அர்த்தம் பாலாக்கல் (பால் என்பது கொழுப்பும்,
நீரும் சேர்ந்த ஒரு பால்மத்திற்கு எடுத்துக்காட்டாகும்) எனப்படும்.

பால்
பால்மமாக்கல்:
திரவக் கலவை பால்மமாக (கொழுப்பும், நீரும் சேர்ந்த கலவையாக) மாறக்கூடிய நிகழ்வு பால்மமாக்கல் எனப்படுகிறது.
Example:
எ.கா.: பால் (கொழுப்பும், நீரும் கலந்த கலவை), வெண்ணெய், பால் குழைவி (Cream), முட்டையின் மஞ்சள்கரு, வர்ணம், இருமல் மருந்து, முகப்பூச்சு, பூச்சிக்கொல்லி மருந்து.

கூழ்மம் பால்மங்கள்
பால்மங்களின் வகைகள்:
இரண்டு திரவங்கள் கலந்து வெவ்வேறு வகையான பால்மங்களை உருவாக்குகிறது.
எடுத்துக்காட்டாக, எண்ணெய் மற்றும் நீர் இரண்டும் கலந்து நீரில் எண்ணெய் என்ற பால்மம் உருவாகிறது. இங்கு எண்ணெய்த் துளிகள் நீரில் பரவியுள்ளன (எ।நீ- எ.கா. பால்குழவி) அல்லது எண்ணெயில் நீர் என்ற பால்மத்தை உருவாக்குகிறது. இங்கு எண்ணெயில் நீர் பரவியுள்ளது. (நீ/எ- எ.கா. எ.கா. வெண்ணெய்).

நீரில் எண்ணெய், எண்ணெயில் நீர்
பால்மங்களின் பயன்பாடுகள்:
உணவு பதப்படுத்தும் முறை, மருந்துகள், உலோகவியல் மற்றும் பல முக்கியமான தொழிற்சாலைகளில் பால்மங்களின் பயன்பாடுகள் மிகுந்த அளவில் காணப்படுகிறது.

உணவு பதப்படுத்தும் தொழிற்சாலை
குறிப்பு:: ஈரமான சாலையில் வண்ணமான திட்டுகள் காணப்படும். சாலையின் மேல் உள்ள நீரில் எண்ணெய்த் துளிகள் மிதக்கின்றன மற்றும் வண்ணத் திட்டுக்களை உருவாக்குகிறது.