PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoமனித உடலில் காணப்படும் உள்ளுறுப்புகளில் மிகவும் முக்கியமானது கல்லீரல் ஆகும். இது மிகப் பெரிய செரிமானச் சுரப்பியாகச் செயல்படுகிறது.
அமைப்பு: கல்லீரல் செம்மண் நிறமுடையது. இது இரண்டு கதுப்புகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும் அவைகளில் வலது கதுப்பானது, இடது கதுப்பை விடப் பெரிதாக இருக்கும்.
கல்லீரல்
கல்லீரலின் பணிகள்:
- கல்லீரல் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு மற்றும் அமினோ அமில அளவை சரியான நிலையில் வைத்திருக்க உதவுகிறது.
- கல்லீரல் இரத்த சிவப்பு அணுக்களைக் கருவில் உருவாக்குகிறது.
- உடலில் காயங்கள் ஏற்படும் போது பைபிரினோஜன் மற்றும் புரோத்ராம்பின் போன்றவற்றைக் கல்லீரல் உருவாக்கும். இவை இரத்தம் உறைதலுக்குப் பயன்படுகிறது.
- இரத்த சிவப்பு அணுக்களைக் கல்லீரல் அழிக்கிறது.
- இரும்பு, தாமிரம், வைட்டமின்கள் \(A\) மற்றும் \(D\) ஆகிய ஊட்டச்சத்துகளைக் கல்லீரல் சேமித்து வைக்க உதவுகிறது.
- கல்லீரல் ஹெப்பாரினை உருவாக்கும். இது இரத்தம் உறைதல் தடுப்பானாகச் செயல்படுகிறது.
- உடலில் உள்ள நச்சுகள் மற்றும் உலோக நச்சுகள் போன்றவற்றைக் கல்லீரல் கழிவுப் பொருளாக வெளியேற்றுகிறது.
- மனிதன் உட்கொள்ளும் மருந்துப் பொருட்கள் மற்றும் ஆல்கஹால் போன்றவை நச்சுத் தன்மை கொண்டது. இவற்றை நம் உடலிலிருந்து கல்லீரல் நீக்குகிறது.
பித்தப்பை:
பித்தப்பை என்பது கல்லீரலின் கீழ்ப்பகுதியில் அமைந்துள்ள ஒரு சிறிய பை போன்ற அமைப்பாகும்.
பித்தநீர் கல்லீரல் செல்களிலிருந்து சுரக்கிறது. அது பித்தப்பையில் தற்காலிகமாகச் சேகரிக்கப்படுகிறது. உணவு உட்கொள்ளும் நேரத்தில் பித்தநீரானது சிறுகுடலுக்குள் தள்ளப்படுகிறது. மேலும் பித்த உப்புகள் (சோடியம் கிளைக்கோலேட் மற்றும் சோடியம் டாரோகிளைக்கோலேட்), பித்த நிறமிகள் (பைலிரூபின் மற்றும் பைலிவிரிடின்) போன்றவை பித்தநீரில் காணப்படுகிறது.
பித்தப்பை
பித்தப்பையின் பணிகள்:
உணவு உண்டதும் பித்தப்பை சுருங்குகிறது. இதில் பித்த உப்புகள், பால்மமாக்கல் போன்ற நிகழ்வுகள் நடைபெறுகிறது. அதாவது இவை பெரிய கொழுப்புகளைச் சிறிய கொழுப்புகளாக மாற்றிச் செரிக்க வைக்க உதவுகிறது. இதுவே கொழுப்பு செரித்தல் என அழைக்கப்படும். மனிதன் பித்தப்பை இல்லாமல் கூட உயிர் வாழ முடியும்.