PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoமனிதனின் பெருங்குடல் இடுப்புச் சரிவின் வலது புறத்தில் இடுப்புக்குக் கீழே அமைந்துள்ளது. பெருங்குடலுக்குள் உறிஞ்சப்படாத மற்றும் செரிக்கப்படாத உணவுப் பொருள்கள் செல்கிறது. இக்குடல் இலியம் (பின்சிறுகுடல்) எனப்படும் சிறுகுடலின் இறுதிப்பகுதியிலிருந்து மலவாய் வரை பரவியுள்ளது. இது சுமார் 1.5 மீட்டர் (5 அடி) நீளமுடையது ஆகும்.
பெருங்குடல்
பெருங்குடல் மூன்று பகுதிகளைக் கொண்டது, அவை:
- முன் பெருங்குடல் அல்லது சீக்கம்
- பெருங்குடல் அல்லது கோலன்
- மலக்குடல் அல்லது ரெக்டம்
1. முன் பெருங்குடல் (சீக்கம்):
பெருங்குடலின் ஆரம்பப்பகுதியான சீக்கம் அதாவது முன் பெருங்குடல் ஆரம்பப் பெருங்குடல் எனவும் அழைக்கப்படுகின்றது. ஆரம்பப் பெருங்குடல் பார்ப்பதற்குச் சிறிய முட்டுப்பை போன்ற தோற்றத்தோடு அகலமாக விரிந்து கீழ் வயிற்றுப் பகுதியின் வலது கீழ்முனைப்புறத்தில் உள்ளன.
சீக்கம் பகுதி சிறுகுடல் மற்றும் பெருங்குடல் சேருமிடத்தில் அமைந்திருக்கும். இதில் குடல்வால் என்ற விரல் போன்ற அமைப்புள்ள உறுப்பு காணப்படும். இது பயனற்ற, குறிப்பிட்ட எந்த பணியும் செய்யாத ஓர் எச்ச உறுப்பாகும்.
சீக்கம்
2. பெருங்குடல் (கோலன்):
பெருங்குடலின் நீளம் சுமார் எட்டு அங்குலம் அல்லது 20 செ.மீ ஆக உள்ளது.
பெருங்குடலின் முதலாவது பிரிவு ஏறு பெருங்குடலாகும். இது பின் சிறுகுடலும் ஆரம்பப்பெருங்குடலும் இணையும் இடத்தில் ஆரம்பமாகும். ஏறு பெருங்குடல் வயிற்றுக் குழியின் வழியாக மேல் நோக்கிச் சென்று வயிற்றின் இடது பகுதியில் குறுக்காகத் திரும்பி அதாவது குறுக்குப் பெருங்குடல், இடதுப் பகுதியில் கீழ் நோக்கிச் செல்லும்.
ஏறுபெருங்குடல் முடிவடையும் இடத்திலுள்ள கல்லீரல் வளைவில் ஆரம்பித்து குறுக்குவாட்டில் சென்று மண்ணீரல் வளைவு வரை நீடிக்கின்ற அமைப்பு குறுக்குப் பெருங்குடல் எனப்படுகிறது. பரவலான பெருங்குடல் வயிற்றிலிருந்து தொங்கிக் கொண்டிருக்கும், இது, பெருமளவிலான பெருங்குடல் என்றழைக்கப்படும். பின்னர் இறங்கு பெருங்குடல் மண்ணீரல் வளைவில் ஆரம்பமாகி இடுப்பு விளிம்புவரை நீண்டு செல்கிறது.
3. மலக்குடல் (ரெக்டம்):
மனிதனின் ஆசன வாயிக்கு சற்று உள்ளே இருக்கும் பகுதி மலக்குடல் (Rectum) என்றழைக்கப்படும். இதுவே பெருங்குடலின் கடைசிப் பகுதியாகும். மலக்குடல் கடைசியாகச் சென்று மலவாயில் திறக்கிறது.
வளையங்கள் போன்ற தசையாலான மூடிய நிலையில் மலவாயானது இருக்கும். இதில் மலச்சுருள் தசை காணப்படும். இது மலமானது வெளியே செல்லும்போது திறக்கும் அமைப்புடையது.
மலக்குடல்
Important!
நாம் உட்கொண்ட உணவு, செரிக்கப்படாத அல்லது உறிஞ்சப்படாத நிலையிலிருக்கும் போது அது கழிவுப்பொருளாக மாறி உடலிலிருந்து மலவாய் வழியாக வெளியேற்றப்படுகிறது. இதனையே மலம் வெளியேற்றல் அல்லது மலம் கழித்தல் எனப்படும்.