
PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoமின் சுற்று, மின் சுற்றில் இணைக்கப்படும் மின் சாதனங்கள் மற்றும் அவற்றை குறிக்கும் குறியீடுகளைப் பற்றி இப்பகுதியில் கற்ப்போம்.
மின்மூலம் ஒன்றின் ஒரு முனையிலிருந்து மற்றொரு முனைக்கு எலக்ட்ரான்கள் பாயும் பாதை மின்சுற்று எனப்படும்.

மின்சுற்றுப் படம்
ஒரு எளிய மின்சுற்றில் மின்சார மூலம் (மின்கலம்), இணைப்புக் கம்பி (உலோகக் கம்பி), சுற்றில் பாயும் மின்னோட்டத்தைக் கட்டுப்படுத்தும் சாவி மற்றும் மின்சாரத்தால் செயல்படும் ஒரு சாதனம் ஆகிய நான்கு கூறுகள் காணப்படும்.

மின்கலம்
- மின்கலன் அல்லது மின்கலன் அடுக்கு என்பது இரசாயன ஆற்றலை மின் ஆற்றலாக மாற்றும் ஒரு சாதனமாகும். இதனால், குறைந்த அளவு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

இணைப்புக் கம்பிகள்
- மின் இணைப்புக் கம்பிகள் மின் கூறுகளை இணைத்து மின்னோட்டம் பாயும் பாதையாக செயல்படுகின்றன.

சாவி
- ஒரு மின்சுற்றில் மின்னோட்டத்தை நிறுத்த அல்லது அனுமதிக்க சுற்றுடன் இணைக்கப்படும் சாதனம் சாவி ஆகும்.
- மின்தடையானது சுற்று வழியாக பாயும் மின்னோட்டத்தின் அளவைக் கட்டுப்படுத்த பயன்படுகிறது.
- மின் தடையில் நிலையான மின்தடை மற்றும் தேவைக்கு ஏற்ப மாற்றி அமைத்துக் கொள்ள கூடிய மின்தடைகள் என வெவ்வேறு மின்தடைகள் உள்ளது.

நிலையான மின்தடையங்கள்

மின் தடை மாற்றி
- மேலே குறிப்பிட்டுள்ள கருவிகளை போன்று பிற மின் கருவிகளும் ஒரு மின் சுற்றில் பயன்படுத்தப்படுகிறது.
- மின் சுற்றில் மின்சாதனங்களின் இணைப்பை எளிமையாக புரிந்துக் கொள்ள மின்சாதனங்களைக் குறிப்பதற்கு ஒரு சீரான குறியீட்டு முறை உருவாக்கப்பட்டுள்ளது.
- ஒரு குறியீட்டு முறையைக் கற்பதன் மூலம், மின்சுற்றுப் படங்களைப் புரிந்து கொள்வது எளிதாகிறது.
மின்சுற்றுகளில் பொதுவாக பயன்படுத்தப்படும் குறியீடுகள் சில அட்டவணையில் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Reference:
https://live.staticflickr.com/156/437342078_b0d773a9a3_b.jpg
https://upload.wikimedia.org/wikipedia/commons/9/92/Leistungspotentiometer_in_Schieberausf%C3%BChrung.JPG