PDF chapter test TRY NOW

ஒரு சுற்றில் பாயும் மின்னோட்டத்தின் மதிப்பை அளவிட்டு அதன் எண்ணளவை நம்மால் குறிப்பிட முடியுமா?
 
ஆம், முடியும். அவை மின்னூட்டம் என்ற அளவால் குறிக்கப்படுகிறது. 
மின்சுற்றின் ஒரு புள்ளியை ஒரு வினாடியில் கடந்து செல்லும் மின்னூட்டங்களின் மதிப்பே "மின்னோட்டம்" எனப்படும்.
YCIND20220805_4002_Electricity_03 (1).png
கடத்தியின் மின்னூட்டம்
 
கம்பியின் ஒரு குறிப்பிட்ட குறுக்குவெட்டுப் பரப்பை, q அளவு மின்னூட்டம் t காலத்தில் கடந்திருந்தால் அக்கம்பியின் வழியே பாயும் மின்னோட்டத்தின் அளவு,
 
I =\frac{\text{q}}{\text{t}}
 
இங்கு,
 
I என்பது \text{மின்னோட்டம்},
q என்பது \text{மின்னூட்டம்},
t என்பது \text{எடுத்துக் கொண்ட காலம்}.
மின்னோட்டத்தின் SI அலகு ஆம்பியர் ஆகும். ஆம்பியரை A என்ற எழுத்தால் குறிக்கப்படுகிறது.
1 ஆம்பியர்:
 
ஒரு ஆம்பியர்  (A) என்பது கம்பி ஒன்றின் குறுக்குவெட்டுப் பரப்பை ஒரு வினாடியில் ஒரு கூலூம்  (C) அளவிலான மின்னூட்டம் கடக்கும்போது, உருவாகும் மின்னோட்டம்  (I) ஆகும். 
1 \text{ஆம்பியர்} = \frac{\text{1 கூலூம்}}{\text{1 வினாடி }}
 
1 A =\frac{\text{1 C}}{\text{1 s }} 
 
1 A = \text{1 C s}^{-1}
 
நாம் மின்சுற்றில் மின்னோட்டத்தின் மதிப்பை எவ்வாறு அளவிடுவது? அதற்கு ஏதேனும் கருவி உண்டா?
  
ஆம் உண்டு
ஒரு மின்சுற்றில் மின்னோட்டத்தின் மதிப்பை அளவிட உதவும் கருவி அம்மீட்டர் எனப்படும்.
shutterstock1658901358.jpg
அம்மீட்டர்
  • நாம் எப்பொழுதும் எந்த ஒரு மின்சுற்றில் மின்னோட்டத்தை அளவிட வேண்டுமோ அதில் அம்மீட்டரை தொடரிணைப்பில் இணைக்க வேண்டும்.
YCIND20220805_4002_Electricity_15.png
தொடர் இணைப்பில் அம்மீட்டர்
  
YCIND_221003_4516_scheme_10.png
அம்மீட்டருடன் கூடிய மின்சுற்று  
 
மேலே உள்ள படத்தைப் போன்று அம்மீட்டரின் சிவப்பு முனையின் (+) வழியே மின்னோட்டம் நுழைந்து கருப்பு முனையின் () வழியே வெளியேறும்.