PDF chapter test TRY NOW
கீழே உள்ள இந்த இரண்டு அணுக்களுக்கிடையேயான
வேறுபாடு என்ன என்று தெரியுமா?
ஐசோபார் எடுத்துகாட்டு
மேலே உள்ள இரண்டு தனிமங்கள் கால்சியம்
மற்றும் ஆர்கான். அவற்றின் அணு எண்கள்
முறையே \(20\), \(18\). அதாவது அவை இரண்டும்
வெவ்வேறு எண்ணிக்கையிலான
புரோட்டான்கள் மற்றும் எலக்ட்ரான்களை
பெற்றுள்ளன.
ஐசோபார்:
இவ்வாறாக ஒத்த நிறை எண்களையும் வேறுபட்ட அணு எண்களையும் கொண்ட வெவ்வேறுத் தனிமங்களின் அணுக்கள் ஐசோபார்கள் எனப்படும்.
ஐசோடோன்கள்:
ஐசோடோன் எடுத்துகாட்டு
மேலே உள்ள தனிமங்களான போரான்,
கார்பன் ஆகியவை ஒத்த எண்ணிக்கையில்
நியூட்ரான்களைப் பெற்றுள்ளன. ஆனால் புரோட்டான் எண்ணிக்கை வேறுபடுவதால்
அவற்றின் அணு எண்களும் வேறுபடுகின்றன.
ஐசோடோன்:
இவ்வாறக ஒத்த நியூட்ரான் எண்ணிக்கை கொண்ட வெவ்வேறு தனிமங்களின் அணுக்கள் ஐசோடோன்கள் எனப்படும்.
ஒவ்வொரு அணுவும் புரோட்டான்களும்,
நியூட்ரான்களும் அடங்கிய நேர்மின் சுமை
உள்ள உட்கருவைக் கொண்டுள்ளது;
எதிர்மின்சுமை உள்ள எலக்ட்ரான்கள் குறிப்பிட்ட
வட்டப்பாதையில் அல்லது ஆர்பிட்டில் உட்கருவைச் சுற்றி வருகின்றன என்பதை இதுவரை
அறிந்தோம். இவ்வாறு உட்கருவைச்
சுற்றியுள்ள ஒவ்வோர் ஆர்பிட்டிலும்
எலக்ட்ரான்கள், அவற்றின் எண்ணிக்கையின்
அடிப்படையில் அமைந்துள்ள ஒழுங்கமைவை
குறிப்பிடுவதே எலக்ட்ரான் அமைப்பு எனப்படும்.