PDF chapter test TRY NOW
ஒரு பொருளின் வேகத்திலோ அல்லது திசையிலோ மாற்றம் ஏற்பட்டால் அப்பொருள் முடுக்கமடைவதாகக் கருதப்படுகிறது.
முடுக்கம் என்பது திசைவேக மாறுபாட்டு வீதம் ஆகும். அல்லது ஓரலகு நேரத்தில் ஏற்படும் திசைவேக மாறுபாடு எனப்படும்.
\text{முடுக்கம்} =
\text{திசைவேக மாறுபாடு} = \text{இறுதித் திசைவேகம்}\ (v) – \text{தொடக்கத் திசைவேகம்} (u)
\text{முடுக்கம்}\ (a) =
\text{முடுக்கம்}\ (a) =
முடுக்கத்தின் SI அலகு ஆகும். இது ஒரு வெக்டர் அளவாகும்.
முடுக்கம் இரண்டு வகைப்படும் அவைகள் முறையே,
- நேர் முடுக்கம்,
- எதிர் முடுக்கம்.
ஒரு பொருளின் திசைவேகமானதுகாலத்தினைப் பொருத்து அதிகரித்துக் கொண்டே சென்றால் அப்பொருளில் ஏற்படும் முடுக்கம் நேர் முடுக்கம் எனப்படும்.
\(v\ >\ u\) எனில், அதாவது, இறுதித் திசைவேகம், தொடக்கத் திசைவேகத்தை விட அதிகமாக இருந்தால், திசைவேகமானது நேரம் செல்ல செல்ல அதிகரிக்கும். மேலும் முடுக்கம் நேர்மதிப்பு பெறும்.
எதிர் முடுக்கம்:
ஒரு பொருளின் திசைவேகமானது காலத்தினைப் பொருத்து குறைந்து கொண்டே வந்தால் அப்பொருளில் ஏற்படும் முடுக்கம் எதிர்முடுக்கம் எனப்படும்.
\(v\ < \ u\), அதாவது இறுதித் திசைவேகம், தொடக்க திசைவேகத்தை விடக் குறைவாக இருந்தால், திசைவேகமானது நேரம் செல்லச் செல்ல குறையும் மற்றும் முடுக்கம் எதிர்மதிப்பு பெறும்.
v\ =\ u, எனில் a\ =\ 0. அதாவது, இறுதித் திசைவேகம் தொடக்க திசைவேகத்திற்குச் சமமாக இருக்கும் பொழுது முடுக்கம் சுழியாகும்.