
PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoஉலோகக் கலவையின் நன்மைகள்:
i. இவை விரைவில் துருப்பிடிப்பதும், அரித்துப்
போவதும் இல்லை. அப்படியே அரித்தாலும்
சிறிதளவே சேதமடைகின்றன.

ii. இவை தூய உலோகத்தை விட கடினமாகவும்
மிகவும் வலிமையானதாகவும் இருக்கும்.
எ.கா.: தங்கம்செம்போடு கலக்கப்படும் போது தூய தங்கத்தை
விட வலிமையானதாக இருக்கும்.

iii. இவை தூய உலோகத்தை விட வெப்பம் மற்றும் மின்சாரத்தை கடத்தும்
தன்மை குறைந்தவை.
எ.கா.: செம்பு அதன்
உலோகக் கலவைகளாகிய பித்தளை மற்றும்
வெண்கலத்தை விட நன்கு வெப்பம் மற்றும்
மின்சாரத்தைக் கடத்தும்.

iv. சிலவற்றின் உருகு நிலை தூய உலோகத்தின்
உருகு நிலையை விட குறைவு.
எ.கா.: பற்றாசு
என்பது ஈயம் மற்றும் வெள்ளீயத்தின் கலவை.
இதன் உருகு நிலை குறைவு.
