PDF chapter test TRY NOW
முற்காலத்தில் தனிமங்களின் வகைப்பாடு:
டாபர்னீரின் மும்மை விதி:
\(1817\) இல் ஜோகன் வுல்ஃப்காங் டாபர்னீர் என்ற ஜெர்மானிய வேதியியல் அறிஞர் தனிமங்களை அவற்றின் அணு நிறையின் அடிப்படையில் வகைப்படுத்தும் ஒரு கருத்தை முதன் முதலில் எடுத்துரைத்தார். இவர் தனிமங்களை ஒவ்வொரு தொகுதிக்கும் மூன்று தனிமங்கள் கொண்ட குழுக்களாக அல்லது தொகுதிகளாகப் பிரித்து வகைப்படுத்தினார். இவர் இந்தக்குழுக்களை ”மும்மை” (மும்மை-மூன்று) என்றும் குறிப்பிட்டார்.
ஜோகன் வுல்ஃப்காங் டாபர்னீர்
டாபர்னீர், மூன்று தனிமங்களை அவற்றின் நிறையின் அடிப்படையில் ஏறு வரிசையில் அடுக்கும்போது நடுவில் உள்ள தனிமத்தின் அணு நிறை மற்ற இரண்டு தனிமங்களின் அணு நிறையின் சராசரிக்கு ஏறத்தாழ சரியாக இருக்கும் எனக் கூறினார். இது டாபர்னீரின் மும்மை விதி என்று அழைக்கப்படுகிறது.
டாபர்னீரின் மும்மை விதி அட்டவணை:
Example:
மும்மை தொகுதி (1) இல் ஒன்றாம் மற்றும் மூன்றாம் தனிமங்களின் (லித்தியம் மற்றும் பொட்டாசியம்) அணு நிறையின் கூட்டுச்சராசரி = 6.9 + 39.1 / 2 = \(23\). இங்கு நடுவில் உள்ள தனிமம் அதாவது சோடியத்தின் அணு நிறையும் அதுவே, அதாவது \(23\).
மும்மை விதியின் குறைபாடுகள்:
- டாபர்னீரால் அக்கால கட்டத்தில் மூன்று தொகுதிகளில் கண்டு பிடிக்கப்பட்டதனிமங்களில் மட்டுமே மும்மைத் தனிமங்களைக் காண முடிந்தது. மேலும் மற்ற தனிமங்களுக்கு இந்த மும்மை விதிக்கு உட்படவில்லை.
- மிகக் குறைந்த அணு நிறை மற்றும் மிக அதிக அணு நிறை கொண்ட தனிமங்களுக்கு இந்த விதியைப் பயன்படுத்த முடியவில்லை.