PDF chapter test TRY NOW
தனிம வரிசை அட்டவணையில் ஹைட்ரஜனின் நிலைப்பாடு:
ஹைட்ரஜன் மிகவும் லேசான வாயு, சிறிய மற்றும் தனிம வரிசை அட்டவணையில் முதல் தனிமமாகும். இதனுடைய அணு அமைப்பு (\(1S^1\) ) மிகவும் எளியது. இது அட்டவணையில் ஒரு தனி இடத்தில் உள்ளது. இவை கார உலோகம் மற்றும் ஹாலஜனின் பண்பை தன்னுள் கொண்டுள்ளன.

தனிம வரிசை அட்டவணையில் ஹைட்ரஜன்
- ஹைட்ரஜன் தனது ஒரே எலக்ட்ரானை இழந்து கார உலோகங்களைப் போல நேர் மின் அயனியாக (\(H^+\)) மாறும் தன்மை உடையது.
- இது ஹாலஜன்கள் (உப்பீனிகள்) போல ஒரு எலக்ட்ரானைப் பெற்று ஹைட்ரைடுகளாக (\(H^-\)) மாறும் தன்மை கொண்டுள்ளது.
- கார உலோகங்கள் திண்மங்கள்; அதே நேரத்தில் ஹைட்ரஜன் ஒரு வாயு.
எனவே தனிம வரிசை அட்டவணையில் ஹைட்ரஜனின் நிலைப்பாடு இன்னும் சர்ச்சைக்குரியதே. ஏனென்றால் ஹைட்ரஜனின் பண்புகள் தனித்தன்மை வாய்ந்ததாகும்.
மந்த வாயுக்களின் நிலைப்பாடு:

மந்த வாயுக்கள்
ஹீலியம், நியான், ஆர்கான், கிரிப்டான், செனான் மற்றும் \(18\) ஆம் தொகுதியில் உள்ள ரேடான் போன்ற தனிமங்கள் அரிய வாயுக்கள் அல்லது மந்த வாயுக்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவை ஓரணுத் தனிமங்கள். மற்ற பொருட்களுடன் அவ்வளவு எளிதில் வினை புரிவதில்லை. எனவே, இவை மந்த வாயுக்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. மேலும், இவை மிகச் குறைந்த அளவிலேயே காணப்படுகின்றன. எனவே, இவை அரிய வாயுக்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.