PDF chapter test TRY NOW
p - தொகுதி தனிமங்கள்:
இத்தொகுதி தனிமங்கள் அட்டவணையில் \(13\) முதல் \(18\) தொகுதிகள் வரை இடம்பெற்றுள்ளன. இத்தொகுதி தனிமங்களின் கடைசி எலக்ட்ரான் ஆனாது p துணைக்கூட்டில் வைக்கப்படுகிறது. இத்தொகுதியில் போரான், கார்பன், நைட்ரஜன், ஆக்ஸிஜன், புளுரின் குடும்பம் மற்றும் மந்த வாயுக்கள் (ஹீலியம் தவிர) அடங்கும். இவை பிரதிநிதித்துவ தனிமங்கள் என்று அழைக்கப்படுகின்றன. \(p\) தொகுதி பெரிய அளவில் பல்வேறுபட்ட தனிமங்களின் சங்கமமாகும். இந்த ஒரு தொகுதியில் மட்டுமே உலோகங்கள், அலோகங்கள் மற்றும் உலோகப் போலிகள் என்ற மூன்று வகை தனிமங்களும் காணப்படுகின்றன.
\(s\), \(p\), \(d\) மற்றும் \(f\) தொகுதி தனிமங்கள்
d - தொகுதி தனிமங்கள்:
இத்தொகுதி தனிமங்கள் அட்டவணையில் \(3\) முதல் \(12\) தொகுதிகள் வரை இடம்பெற்றுள்ளன. இத்தொகுதி தனிமங்களின் கடைசி எலக்ட்ரான் ஆனாது d துணைக்கூட்டில் வைக்கப்படுகிறது. மேலும் இவை தனிம அட்டவணையின் மையத்தில் காணப்படுகின்றது. இவற்றின் பண்புகள் s தொகுதி மற்றும் p தொகுதி தனிமங்களுக்கு இடையில் உள்ளது. எனவே, இவை இடைநிலைத் தனிமங்கள் எனவும் அழைக்கப்படுகின்றது.
f - தொகுதி தனிமங்கள்:
இத்தொகுதி தனிமங்களின் கடைசி எலக்ட்ரான் ஆனாது f துணைக்கூட்டில் வைக்கப்படுகிறது. இவை லாந்தனத்தை அடுத்துள்ள \(14\) தனிமங்களையும் (லாந்தனைடுகள்), ஆக்டினத்தை அடுத்துள்ள \(14\) தனிமங்களையும் (ஆக்டினைடுகள்) உள்ளடக்கியதாகும். எனவே, இவை உள் இடைநிலைத் தனிமங்கள் எனவும் அழைக்கப்படுகின்றது. மேலும் இவை தனிம அட்டவணையின் அடிப்பாகத்தில் காணப்படுகின்றது.