PDF chapter test TRY NOW

1. உடற்குழி அற்றவை:
 
உயிரினங்களில் உண்மையான உடற்குழி அற்ற விலங்குகள் உடற்குழி அற்றவை என்று அழைக்கப்படுகின்றன.
 
2. இருவாழ்விகள்:
 
தவளைகள், தேரைகள், நியூட்டுகள் மற்றும் சாலமாண்டர்கள் போன்ற உயிரினங்களை உள்ளடக்கியது முதுகெலும்புள்ளவைகளின் தொகுதியாகும். இவை நீர் மற்றும் நிலம் என இரண்டிலும் வாழக்கூடியாவையாகும்.
 
3. வளைதசைப்புழுக்கள்:
 
உயிரினங்களில் உடலில் கண்டங்களுடைய புழுக்களின் தொகுதி வளைதசைப்புழுக்கள் ஆகும்.
Example:
மண்புழுக்கள் மற்றும் அட்டைகள்
4. பறவைகள்:
 
அனைத்து விதமான பறவைகளையும் உள்ளடக்கிய முதுகெலும்பி உயிரினங்கள் பறவைகள் தொகுதியைச் சாரும்.  
 
5. உடற்குழி கொண்டவை:
 
உண்மையான உடற்குழி கொண்ட விலங்குகள்.
 
6. வகைப்பாடு:
 
ஒன்றோ அதற்கு மேற்பட்ட பொதுவான பண்புகளுடைய உயிரினங்களைக் கொண்ட விலங்குகளை வரிசைப்படுத்தி வகைப்படுத்துதல் வகைப்பாடு என்று அழைக்கப்படும். 
 
7. பாலூட்டிகள்:
 
உரோமம், பால்சுரப்பிகள் ஆகியவற்றைக் கொண்டவை பாலூட்டிகள் எனப்படும். இவை தங்களது இளம் உயிரினங்களுக்கு பாலூட்டக்கூடியவை. மேலும் முதுகெலும்புள்ள உடலமைப்புள்ள வெப்ப இரத்த விலங்குகள் பாலூட்டிகள் என்று அழைக்கப்படும். 
 
8. பொய் உடற்குழியுடையவை:
 
உண்மையான எபித்தீலிய உறைகள் இல்லாத திரவம் நிரம்பிய உயிரினங்கள் பொய் உடற்குழி உடையவை என்று அழைக்கப்படும்.  
 
9. தேரை:
 
தவளைகளைவிட மென்மையான தோலைக்கொண்ட உயிரினங்கள் தேரைகளாகும். இவை குதிப்பதற்குப் பதிலாகத் தாவிச் செல்லும் தரைவாழ் உயிரிகளாகும்.