PDF chapter test TRY NOW

தட்டைப் புழுக்கள் (பிளாட்டிஹெல்மென்திஸ்):
  
தட்டைப்புழுக்கள் இருபக்கச் சமச்சீரான மூவடுக்குகள் கொண்ட உயிரிகளாகும். இவற்றில் உடற்குழி காணப்படுவதில்லை. இந்த உயிரினங்களில் மெய்யான உணவுக்கால்வாய் இருந்தாலும், அது முழுமையற்றதாகவே உள்ளது.
 
தட்டைப்புழுக்கள் தங்கள் உடலில் உள்ள உறிஞ்சிகள், கொக்கிகள் மூலம் பிற உயிரினங்களின் உடலின்மேல் ஒட்டிக்கொள்கின்றன. இவை பெரும்பாலும் ஒட்டுண்ணி வாழ்க்கையே வாழும்.
சிறப்பு வாய்ந்த தொடர் செல்களால் கழிவு நீக்கமானது நடைபெறும்.
 
தட்டைப்புழுக்கள் இரு பால் உயிரிகள், அதாவது ஆண் மற்றும் பெண் இனப் பெருக்க உறுப்புகள் ஒரே உயிரியில் காணப்படும். தட்டைப் புழுக்களில் கழிவுநீக்கமும் ஊடு கலப்பு ஒழுங்குப்பாடும் சுடர் செல்களால் நடைபெறும்.
Example:
கல்லீரல் புழு, நாடாப்புழு
FotoJet4w400.png
தட்டைப் புழுக்கள்
 
உருளைப் புழுக்கள் (நிமட்டோடா அல்லது அஸ்கிஹெல்மென்திஸ்):
 
உருளைப் புழுக்கள் இருபக்கச் சமச்சீர், மூவடுக்குகள் கொண்ட விலங்குகளாகும்.
பொய்யான உடற்குழிகளைக் கொண்டவை. பலவகை உருளைப் புழுக்கள் தனித்து மண்ணில் வாழ்பவையாகும். அவற்றில் சில ஒட்டுண்ணிப் புழுக்களாக வாழ்பவையாகும்.
 
கண்டங்கள் இல்லாத மேற்புறத்தில் கியூட்டிகள் என்னும் மெல்லிய தோல் உறையால் உடல் சூழப்பட்டுள்ளது. உடல் உருளை வடிவம் கொண்டவை, இரு முனைகளும் கூர்மையாகவும் உள்ளன. உருளைப் புழுக்களின் உணவுக்குழல் ஒரு நீண்ட குழாய் அமைப்புடையது.
  
தனிப்பால் உயிரிகளான இவை யானைக்கால் நோய் மற்றும் ஆஸ்காரியாஸிஸ் ஆகியவற்றை தோற்றுவிக்கும்.
Example:
ஆஸ்காரிஸ், உச்செரேரியா
FotoJet5w400.png
உருளைப் புழுக்கள்
Reference:
https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/4/43/Fasciola_hepatica_%28Linnaeus%2C_1758%29_2013_000-2.jpg/512px-Fasciola_hepatica_%28Linnaeus%2C_1758%29_2013_000-2.jpg
https://www.flickr.com/photos/occbio/6414501563
https://upload.wikimedia.org/wikipedia/commons/9/9b/Taenia_solium_scolex_x400.jpg
https://www.flickr.com/photos/gtzecosan/15701719491
https://www.flickr.com/photos/occbio/6414497563
https://www.flickr.com/photos/gtzecosan/15703630875
https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/e/e5/Enterobius_vermicularis-1.jpg/512px-Enterobius_vermicularis-1.jpg