PDF chapter test TRY NOW
மெல்லுடலிகள் (மொலஸ்கா):
மெல்லுடலிகள் மிகப்பெரிய தொகுதியைச் சேர்ந்த நீர் (நன்னீர், கடல்நீர்) மற்றும் நிலம் என இரண்டிலும் வாழும் உயிரினங்களாகும். இருபக்கச் சமச்சீர் உடலமைப்பு கொண்டவையாகும். இவற்றின் உடல் பொதுவாக வழவழப்பானதாகவும், மென்மையானதாகவும் இருக்கும். இவை மிக மெலிதான ஓடுகளைக் கொண்டு இருக்கும்.
மேலும் மெல்லுடலிகளின் உடலமைப்பு தலை, உள்ளுறுப்புத் தொகுப்பு மற்றும் தசையாலான பாதம் என பிரிக்கப்பட்டுள்ளது. இடம்பெயர்தலில் பாதம் உதவுகிறது. இவை தம்மைச் சுற்றிப் பாதுகாப்புக்காக கால்சியம் கார்பனேட்டால் ஆன ஓட்டைச் (calcareous shell) சுரக்கின்றன.
செவுள்கள் (டினிடியம்) அல்லது நுரையீரல் மூலமாகவோ அல்லது இந்த இரு அமைப்புகள் மூலமாகவோ சுவாசித்தல் நடைபெறுகின்றது. இவற்றின் வளர்ச்சி நிலைகளில் லார்வா நிலை காணப்படுகின்றது. மெல்லுடலிகள் ஒரு பால் உயிரிகளாகும்.
Example:
தோட்டத்து நத்தை, ஆக்டோபஸ்

மெல்லுடலிகள்
Important!
முதுகு நாண் அற்ற உயிரிகளில் ஆளுமை, உணர்ச்சி, அறிவுத்திறன், தன்விழிப்புணர்வு, மனிதர்களுடனான தொடர்பு மற்றும் தனித்தன்மை போன்ற குணப்பண்புகளைக் கொண்ட ஒரே உயிரினம் ஆக்டோபஸ் மட்டுமேயாகும். புவியில் மனிதர்களுக்கு அடுத்தபடியாக ஆளுமை செலுத்தக்கூடியா உயிரினங்களில் இவை இருக்குமென சிலர் யூகிக்கின்றனர்.
முட்தோலிகள் (எகைனோ டெர்மேட்டா):
முட்தோலிகள் கடலில் வாழ்பவையாகும். இவை உண்மையான உடற்குழி கொண்டு, உறுப்பு மண்டல கட்டமைப்பு மற்றும் மூவடுக்கு உடலமைப்பும் கொண்ட உயிரினங்களாகும். இவற்றில் இளம் உயிரிகள் (லார்வாக்கள்) இருபக்கச் சமச்சீர் உடலமைப்பும், முதிர் உயிரிகள் ஆரச் சமச்சீர் உடலாமைப்பும் கொண்டவையாகும். இவற்றின் சிறப்புப் பண்பு திரவத்தினால் நிரம்பிய வாஸ்குலார் அமைப்பு (Water vascular system) ஆகும்.
இவற்றின் இடப்பெயர்ச்சி குழாய் கால்கள் மூலம் நடைபெறுகின்றது. முட்தோலிகளின் உடல்அமைப்பில் புறச்சட்டகம் கால்ஷியம் தகடுகளால் (calcareous ossicles) ஆனது. உடல் முழுவதும் வெளிபுறத்தில் முட்களாலும் நுண் இடுக்கிகளாலும் சூழ்ந்து காணப்படுகின்றது.
Example:
நட்சத்திர மீன், கடல்குப்பி

முட்தோலிகள்
அரைநாணிகள் (ஹெமிகார்டேடா):
மென்மையான புழு வடிவம் கொண்டு, கண்டங்கள் அற்ற உடலமைப்பைக் கொண்ட உயிரினங்கள் அரைநாணிகள் எனப்படும். அரைநாணிகள் இருபக்க ஆரச் சமச்சீர் மற்றும் உண்மையான உடற்குழி கொண்டவையாகும். இவ்வகை உயிரினங்கள் முதுநாண் உள்ள மற்றும் முதுகுநாணற்றவற்றின் பண்புகளைக் கொண்டவையாகும்.
அரைநாணிகளுக்கு முதுகுநாண் இருப்பதில்லை. அரைநாணிகளுக்கு செவுள்கள் காணப்படும்.
உணவூட்டம்கசையிழைகளால் மேற்கொள்ளப்படுகின்றது. இவைகள் வளை தோண்டி வாழும் உயிரிகள்.
Example:
பலனோகிலாஸஸ் (ஏகான் புழுக்கள்)

அரைநாணிகள்
Reference:
https://en.wikipedia.org/wiki/Echinoderm#/media/File:Echinodermata.png
https://www.flickr.com/photos/nmbeinvertebrata/45902849942/in/photostream/
https://upload.wikimedia.org/wikipedia/commons/a/a1/Phylum-Annelida-Diagram.jpg
https://www.flickr.com/photos/nmbeinvertebrata/45902849942/in/photostream/
https://upload.wikimedia.org/wikipedia/commons/a/a1/Phylum-Annelida-Diagram.jpg