PDF chapter test TRY NOW
மிகப் பெரிய ஒரு இலக்க எண் 9 ஆகும். மிகப்பெரிய ஒரு இலக்க எண்ணுடன் 1ஐச் சேர்த்தால் 9+1=10 கிடைக்கும். அதாவது, இது மிகச்சிறிய இரண்டு இலக்க எண்ணில் விளைகிறது.
மிகப் பெரிய இரண்டு இலக்க எண் 99. பெரிய இரண்டு இலக்க எண்ணுடன் 1ஐச் சேர்த்தால் 99+1=100 கிடைக்கும். அதாவது, இது மிகச்சிறிய மூன்று இலக்க எண்ணில் விளைகிறது.
மிகப் பெரிய இரண்டு இலக்க எண் 99. பெரிய இரண்டு இலக்க எண்ணுடன் 1ஐச் சேர்த்தால் 99+1=100 கிடைக்கும். அதாவது, இது மிகச்சிறிய மூன்று இலக்க எண்ணில் விளைகிறது.
பெரிய எண்களின் உருவாக்கம் பற்றி இப்பொழுது நாம் அறியப் போகிறோம். பின்வரும் அட்டவணையை உற்று நோக்கிப் பெரிய எண்களின் வளர் படி நிலையைப் பற்றி அறிவோம்.
அட்டவணை :
மிகப் பெரிய எண் | கூட்டுக | சமம் | மிகச் சிறிய எண் | எண்ணின் பெயர் |
9 | +1 | = | 10 | பத்து |
99 | +1 | = | 100 | நூறு |
999 | +1 | = | 1000 | ஆயிரம் |
9999 | +1 | = | 10000 | பத்தாயிரம் |
99999 | +1 | = | 100000 | இலட்சம் |
999999 | +1 | = | 1000000 | பத்து இலட்சம் |
9999999 | +1 | = | 10000000 | ஒரு கோடி |
மேலே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையின் படி மிகப்பெரிய ஓரிலக்க எண் 9-ஐ 1 உடன் கூட்டும் போது 10 என்னும் மிகச்சிறிய ஈரிலக்க எண்ணை பெறலாம்.
அதைப்போன்று (99 +1 = 100) -ஐயும், (999 +1 = 1000) -ஐயும் பெறலாம்.
அடுத்து வரும் நிரைகளை உற்று நோக்குகையில் 10 உடன்
சுழியம் கூடுதலாக சேர்ந்து கொண்டே செல்வதை காண்கிறோம்.
சுழியம் கூடுதலாக சேர்ந்து கொண்டே செல்வதை காண்கிறோம்.
முக்கியத்துவம் வாய்ந்த 10-ஐ அடிப்படையாகக் கொண்ட இந்த எண் முறையினம் முதலில் இந்தியர்களால் கண்டறியப்பட்டது.
10 இன் மடங்கின் வளர்ச்சியைப் பின்வரும் பட்டியலில் காண்போம்.
1 \times 10 = 10 (பத்து)
10 \times 10 = 100 (நூறு)
100 \times 10 = 1000 (ஆயிரம்)
1000 \times 10 = 10000 (பத்தாயிரம்)
10000 \times 10 = 100000 (இலட்சம்)
100000 \times 10 = 1000000 (பத்து இலட்சம்)
10 \times 10 = 100 (நூறு)
100 \times 10 = 1000 (ஆயிரம்)
1000 \times 10 = 10000 (பத்தாயிரம்)
10000 \times 10 = 100000 (இலட்சம்)
100000 \times 10 = 1000000 (பத்து இலட்சம்)

ஒவ்வொரு புதிய வரிசையும் ஓர் எண்ணின் பத்து மடங்காகவும், 2 வரிசைகளைக் கடந்து சென்றால் எண்ணின் மதிப்பானது நூறு மடங்காகவும் அதிகரிக்கிறது. எடுத்துக்காட்டாக, 1000 = 10 இன் 100 மடங்கு அல்லது ஓராயிரத்தில் நூறு பத்துகள் இருக்கும்!