PDF chapter test TRY NOW

பொருட்களை எண்ணவும் , அளவிடவும்  எண்கள் பயனுள்ளதாக இருக்கும். அளவுகளை ஒப்பிட்டுப் பார்த்து, எது பெரியது எனக் கூறவும், அவற்றை வரிசைப்படுத்தவும் அவை நமக்கு உதவுகின்றன.
முந்தைய வகுப்புகளில், எண்களைக் கூட்டுவது, கழிப்பது, பெருக்குவது மற்றும் வகுப்பது எப்படி என்று கற்றுக்கொண்டோம்.
 
மேலும், எண் வரிசைகளில் வடிவங்களைப் பெற முயற்சித்தோம் மற்றும் எண்களைக் கொண்டு பல சுவாரஸ்யமான விஷயங்களைக் கற்றுக்கொண்டோம்
 
இப்போது நாம் பெரிய எண்களைப் பற்றி அறிந்து கொள்ளப் போகிறோம்.
 
நீங்கள் எப்போதாவது உங்கள் தந்தையின் கைப்பேசி  எண்ணை கணித வார்த்தை வடிவில் படிக்க முயற்சித்திருக்கிறீர்களா?
 
ஆதார் எண்ணில் (UIN) உள்ள இலக்கங்களின் எண்ணிக்கையை எண்ணிவிட்டீர்களா?
 
நீங்கள் செய்திகளில் கேட்கும் போது மில்லியன்', கோடி, லட்சம், பில்லியன்' என்ற வார்த்தைகளை எப்போதாவது நினைத்துப் பார்த்ததுண்டா?
 
மேலே உள்ள எல்லா நிகழ்வுகளிலும், நாங்கள் பெரிய எண்களைக் கையாண்டோம்.
 
பெரிய எண்களைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் சொற்களை இங்கே நாம் புரிந்துகொள்கிறோம்.