PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
விதி I: ஒரு எண் மற்றொரு எண்ணால் வகுபட்டால் அந்த எண்ணின் காரணிகளாலும் வகுபடும்.
Example:
\(18\) மற்றும் \(72\) என்ற எண்களை எடுத்துக்கொள்வோம்.
 
இங்கு, \(72\div18 = 4\) 
 
அதாவது, \(72\) ஆனது \(18\) ஆல் வகுபடும்.
 
\(18\) இன் காரணிகள் \(1, 2, 3, 6, 9, 18\).
 
தற்போது, \(72\div1=72\)
 
\(72\div2=36\)
 
\(72\div3=24\),
 
\(72\div6=12\)
 
\(72\div9=8\)  
 
\(72\div18=4\).
 
இங்கு, \(72\) ஆனது \(18\) இன் காரணிகளாலும் வகுபடுவதைக் காணலாம்.
விதி II: ஒரு எண் இரு சார்பகா எண்களால் வகுபட்டால் அதன் பெருக்கற்பலனாலும் வகுபடும்.
Example:
\(90\) ஆனது \(5\) மற்றும் \(9\) ஆல் வகுபடும்.
 
இங்கு, \(5\) மற்றும் \(9\) என்பது சார்பகா எண்கள்.
 
மேலும், (\(5\times9 = 45\)).
 
\(90\div45 = 2\).
 
எனவே, \(90\) ஆனது \(5\) மற்றும் \(9\) இன் பெருக்கற்பலனான \(45\) ஆல் வகுபடும் என்பதை அறியலாம்.