PDF chapter test TRY NOW
வடிவியல் என்பது ஒவ்வொரு கருத்தையும் அதன் பண்பு மற்றும் வடிவத்தைக் கொண்டு காட்சிபடுத்துவதாகும். இவ்வுலகில் உள்ள ஒவ்வொரு பொருளும் வடிவியலின் கீழ் வகைப்படுத்தப்படுகின்றன.
"Geometry" என்ற ஆங்கில வார்த்தையானது "Geometron" என்ற கிரேக்க வார்த்தைக்கு இணையானதாகும் . "Geo" மற்றும் "metron" என்ற வார்த்தைகள் முறையே "பூமி " மற்றும் "அளவீடு" என்பதைக் குறிக்கிறது.
நாம் பல வரலாற்று நினைவுச்சின்னங்களைப் பார்த்திருக்கிறோம், இந்த நினைவுச்சின்னங்கள் நம்மை ஆச்சரியப்படுத்தும் பல வடிவங்கள் மற்றும் உருவங்களைக் கொண்டுள்ளன.
அவை மிகவும் சிக்கலான கட்டமைப்பு கொண்டவையா?
இல்லை, அவை "வடிவியல் " என்று அழைக்கப்படும் கணிதத்தின் கிளைக்குள் நாம் கற்றுக் கொள்ளும் வடிவங்களை ஒருங்கிணைத்து உருவாக்கப்படுகின்றன.
இந்த படத்தில் இருப்பது தஞ்சாவூர் கோவில் (பிரகதீஸ்வரர் கோவில்) என்று நாம் அனைவரும் அறிவோம். கோவில் மேலே உள்ள அமைப்பு (குவிமாடம்) கோள வடிவிலும், கோவிலை சுற்றி உள்ள தூண்கள் அனைத்தும் நேர்க்கோடு வடிவிலும் உள்ளன. இது நம் சுற்றுப்புறத்தில் வடிவியலின் பயன்பாட்டிற்கான ஒரு எடுத்துக்காட்டு. நம் அன்றாட வாழ்வில் காணும் நேர்கோடுகள் மற்றும் வட்டத்திற்கான இன்னும் சில பொருட்களைப் பார்ப்போம்.

Example:
நேர்க்கோடு:
1. எழுதுகோல்
2. அளவுகோல்
2. அளவுகோல்
கோளம்:
1. பந்து
2. ஆரஞ்சு
எனவே, நமது அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருக்கும் அனைத்து அத்தியாவசியப் பொருட்களும் வடிவியலின் ஒரு பகுதி ஆகும்.