
PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free DemoMN என்ற நேர்க்கோடு வரைந்து அதன் மேல் P என்ற புள்ளியை குறிக்கவும். P லிருந்து MN க்கு இணையாக ஒரு நேர்க்கோடு வரைக.
படி 1: MN என்ற நேர்க்கோடு வரைக.
படி 2: MN என்ற நேர்க்கோட்டின் மேல் P என்ற புள்ளியைக் குறிக்கவும்.
படி 3: மூலைமட்டத்தின் ஒரு பகுதியை MN மீது வைக்கவும். மூலைமட்டத்தின் மற்றொரு பகுதியில் ஒரு அளவுக்கோலை வைக்கவும்.
படி 4: அளவுகோலை நகர்த்தாமல் மூலைமட்டத்தை M என்ற புள்ளி வரை நகர்த்தவும்.
படி 5: P வழியே ஒரு நேர்க்கோடு வரைக. அதனை Q என்ற புள்ளி வரைக் கொண்டு செல்லவும்.
படி 6: PQ என்பது MN க்கு இணையான நேர்க்கோடு ஆகும். அதாவது, PQ \parallel MN.

XY என்ற கோட்டுத்துண்டு வரைக. கோட்டுத்துண்டிற்கு மேலே 3.6 செ.மீ தூரத்தில் S என்ற புள்ளியைக் குறிக்க. S வழியே கோட்டுத்துண்டிற்கு இணைகோடு வரைக.
படி 1: அளவுகோலைப் பயன்படுத்தி XY என்ற கோடு வரைக. கோட்டின் மீது T என்ற புள்ளியைக் குறிக்க.
படி 2: மூலைமட்டத்தின் செங்கோணத்தை உருவாக்கும் ஒரு பக்கம் XY என்ற கோட்டின் மீதும், செங்கோணத்தை உருவாக்கும் முனை T என்ற புள்ளியிலும் படத்தில் காட்டியுள்ளவாறு அமைக்க. T விலிருந்து 3.6 செ.மீ தூரத்தில் S என்ற புள்ளியைக் குறிக்க.
படி 3: அளவுகோல் மற்றும் மூலைமட்டத்தைப் படத்தில் காட்டியவாறு பொருத்துக.
படி 4: அளவுகோலை நகர்த்தாமல் மூலைமட்டத்தை S என்ற புள்ளி வரை நகர்த்துக.
படி 5: மூலைமட்டத்தின் விளிம்பை ஒட்டி S வழியே RS என்ற கோடு வரைக. RS ஆனது XY என்ற கோட்டிற்கு இணைகோடாகும். RS || XY.

XY=13 செ.மீ என்ற நேர்க்கோடு வரைக. XY லிருந்து 4 செ.மீ தொலைவில் A மற்றும் B என்ற இரு புள்ளிகளைக் குறிக்க. A மற்றும் B இன் வழியே XY க்கு இணையாக கோடு வரைக.
படி 1: அளவுகோலைப் பயன்படுத்தி XY=13 செ.மீ என்ற கோடு வரைக.
படி 2: மூலைமட்டத்தின் மூலம் X லிருந்து 4 செ.மீ தொலைவில் A என்ற புள்ளியைக் குறிக்கவும்.
படி 3: மூலைமட்டத்தின் மூலம் Y லிருந்து 4 செ.மீ தொலைவில் B என்ற புள்ளியைக் குறிக்கவும்.
படி 4 அளவுகோலின் உதவியுடன் AB ஐ இணைக்கவும் AB ஆனது XY க்கு இணையாக இருக்கும்.
