PDF chapter test TRY NOW
தசம புள்ளி நிலை:
1. ஒரு தசம எண்ணை 10,100,100,10000ஆல் பெருக்கும்போது தசமபுள்ளியை முறையே வலப்புறமாக 1,2,3,4 இடங்களுக்கு நகர்த்த வேண்டும்.
2. ஒரு தசம எண்ணை 10,100,100,10000ஆல் வகுக்கும்போது தசமபுள்ளியை முறையே இடப்புறமாக 1,2,3,4 இடங்களுக்கு நகர்த்த வேண்டும்.
Example:
1. 125.643 ஐ 10 ஆல் பெருக்கவும்.
10 இல் உள்ள பூஜ்ஜியங்களின் எண்ணிக்கை 1. எனவே, தசம புள்ளியை ஒரு இடம் வலது பக்கம் நகர்த்தவும்.
125.643 \ 10 = 1256.43
2. 125.643 ஐ 100 ஆல் பெருக்கவும்.
100 இல் உள்ள பூஜ்ஜியங்களின் எண்ணிக்கை 2. எனவே, தசமப் புள்ளியை இரண்டு இடங்கள் வலது பக்கம் நகர்த்தவும்.
125.643 \ 100 = 12564.3
3. 125.643 ஐ 10 ஆல் வகுக்கவும்.
10 இல் உள்ள பூஜ்ஜியங்களின் எண்ணிக்கை 1. எனவே, தசம புள்ளியை ஒரு இடம் இடது பக்கம் நகர்த்தவும்.
= 12.5643
4. 125.643 ஐ 1000 ஆல் வகுக்கவும்.
1000 இல் உள்ள பூஜ்ஜியங்களின் எண்ணிக்கை 3. எனவே, தசம புள்ளியை மூன்று இடங்கள் இடது பக்கம் நகர்த்தவும்.
= 0.125643