PDF chapter test TRY NOW
விகிதம் என்பது மதிப்புகளின் ஒப்பீடு. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், 'ஒரு விகிதமானது மற்றொன்றுடன் ஒப்பிடும்போது ஒன்று எவ்வளவு இருக்கிறது என்பதைக் கூறுகிறது'.
Example:
2 முட்டைகள் மற்றும் 3 கோப்பை மாவு உள்ளது.

2 முட்டைகள் மற்றும் 3 கோப்பைகள்
விகிதங்கள் பல்வேறு வழிகளில் காட்டப்படலாம்:
- மதிப்புகளை 2:3 ஆக அமைக்க ":"பயன்படுத்தவும்.
- அல்லது 2 முதல் 3 வரை எனவும் குறிப்பிடலாம்.
- அல்லது பின்னமாக \frac {2}{3} என்று எழுதவும்.
விகிதசமம் என்பது இரண்டு விகிதங்கள் (அல்லது பின்னங்கள்) சமம்.
Example:

2 முட்டைகள் மற்றும் 3 கோப்பைகள் \(=) 4 முட்டைகள் மற்றும் 6 கோப்பைகள்
மேலே உள்ள படத்திலிருந்து \frac {2}{3} = \frac {4}{6} என்பதை நாம் எளிதாகப் புாிந்து கொள்ளலாம்.
எனவே, 3 கோப்பை மாவில் 2 முட்டைகள் என்பது 6 கோப்பை மாவில் 4 முட்டைகளுக்குச் சமம்.
விகிதங்கள் ஒரே மாதிரியானவை. எனவே, அவை விகிதச்சமத்தில் உள்ளன.