PDF chapter test TRY NOW

வரைபடங்கள்:
 
  • பொதுவாக வரைபடங்கள் நிஜ உலகத்தை மிகச்சிறிய அளவில் குறைத்துக் காட்டப் பயன்படுத்தப்படுகின்றன. 
  • புவியியல் இருப்பிடங்களை குறிக்கவும், அதனைப் பகுப்பாய்ந்து அறிந்து கொள்ளவும் வரைபடங்கள் பயன்படுகின்றன.
  • புவியியல் சூழலில் முக்கிய உண்மைகளை வழங்குவதற்கு வரைபடங்கள் பயனுள்ளதாக இருக்கும், மேலும் ஒரு சிக்கலான கருத்தை விளக்கமாகவும் எளிதாகவும் அணுக உதவுகிறது.
ஒரு வரைபடம் என்பது ஒரு நிலத்தின் அல்லது கடலின் அல்லது ஏதோ ஒரு குறிப்பிட்ட பகுதியை படத்துடன் விளக்குவது ஆகும். இது இயற்பியல் அம்சங்கள், நகரங்கள், சாலைகள் போன்றவற்றைக் குறிக்கிறது.
வரைபடவியல் (Cartography) என்பது வரைபடங்களை உருவாக்கும் ஒரு கலை. வரைபடங்களைப் படிப்பவர்கள் (அல்லது) வரைபடங்களை உருவாக்குபவர்கள் வரைபட வல்லுநர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள் .
அளவிடுதல்:
அளவிடுதல் என்பது வரைபடத்தில் உள்ள தூரத்திற்கும் தரையில் உள்ள தூரத்திற்கும் இடையிலான உறவை அல்லது விகிதத்தைக் குறிக்கிறது. உதாரணமாக, ஒரு 1:100000 அளவிலான வரைபடம், 1 \ \text{செ.மீ} வரைபடம் 1 \ \text{கி.மீ} அளவிலான நிலப்பரப்பை குறிக்கிறது.