PDF chapter test TRY NOW
யாழினி என்பவர் அருங்காட்சியகம் சென்றிந்தார். அங்கு ராட்டினம் ஒன்றைக் கண்டார். மேலும், அருங்காட்சியகத்தில் பல விளையாட்டு பொருட்கள் வட்ட வடிவில் இருப்பதைக் கண்டார்.

யாழினி மட்டும் அல்ல நாமும் நம்முடைய அன்றாட வாழ்வில் பல்வேறு இடங்களில் வட்ட வடிவங்களைக் கடந்து
வந்துள்ளோம்.
Example:
1. வாகங்கனங்களின் சக்கரம்
2. கடிகாரம்
3. வளையம்
4. தோசை போன்ற உணவு வகைகள்
5. வளையல்கள்
வட்டத்தைப் பற்றி மேலும் சில தகவல்களை பார்க்கலாம்.
தளத்தில் கொடுக்கப்பட்ட புள்ளியிலிருந்து சமமான தொலைவில் இருக்கும் அனைத்து புள்ளிகளையும் கொண்ட ஒரு மூடிய கோடு வட்டம் என்று அழைக்கப்படுகிறது.
- வட்டத்தின் மேல் உள்ள ஏதேனும் இரு புள்ளிகளுக்கு இடையேயுள்ள தொலைவு.
- வட்டத்தின் மையத்தின் வழியேச் செல்லும் மிக பெரிய நாண்.
- ஆரத்தின் இருமடங்கு.

விட்டம் \(=\) \(2 \times \) ஆரம் \(=\) \(2r\)
வட்டத்தின் ஆரம்:
வட்டத்தின் ஆரம் என்பது வட்டத்தின் மையத்திலிருந்து வட்டத்தின் மேல் உள்ள ஏதேனும் ஒரு புள்ளிக்கு இடையேயுள்ள தொலைவு ஆகும்.

ஆரம் என்பது விட்டத்தின் பாதி ஆகும்.
Important!
யின் மதிப்பு \(22/7\) அல்லது \(3.14\) ஆகும்.