PDF chapter test TRY NOW

செவ்வகப் பாதையின் பரப்பளவு:
செவ்வகப் பாதையின் பரப்பளவு என்பது உட்புறச் செவ்வகத்தின் பரப்பளவிற்கும் வெளிப்புற செவ்வகத்தின் பரப்பளவிற்கும் உள்ள வேறுபாடு ஆகும்.
 
4383_Measurements_02.png
 
l மற்றும் b என்பது உட்புறச் செவ்வகத்தின் நீளம் மற்றும் அகலம் எனில்,
 
உட்புறச் செவ்வகத்தின் பரப்பளவு = l×b சதுர அலகுகள்.
 
L மற்றும் B என்பது வெளிப்புறச் செவ்வகத்தின் நீளம் மற்றும் அகலம் எனில்,
 
வெளிப்புறச் செவ்வகத்தின் பரப்பளவு =L \times B சதுர அலகுகள்.
செவ்வகப் பாதையின் பரப்பளவு = வெளிப்புறச் செவ்வகத்தின் பரப்பளவு உட்புறச் செவ்வகத்தின் பரப்பளவு.
அதாவது செவ்வகப் பாதையின் பரப்பளவு (LBlb) சதுர அலகுகள்.