
PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoமாறி, மாறிலி , உறுப்புகளாக கணித செயலிகளால் இணைந்து இப்போது நமக்கு இயற்கணிதக் கோவைகள் கிடைத்து விட்டது. இந்த இயற்கணிதக் கோவைகள் மதிப்புகளை கண்டறிய வேண்டுமல்லவா?
இயற்கணிதக் கோவையின் மதிப்பைக் கணக்கிடுவதற்கு நான்கு படிகள் உள்ளது.
இயற்கணிதக் கோவையின் மதிப்பைக் கணக்கிடுவதற்கு நான்கு படிகள் உள்ளது.
இயற்கணித கோவையின் மதிப்பைக் கண்டறிவதற்கான படிகள்:
படி 1: முதலில் கணக்கைப் புரிந்துகொண்டு, மாறியை கண்டறிந்து அதைக் கொண்டு, இயற்கணிதக் கோவையை எழுதவும்.
படி 2: கொடுக்கப்பட்ட எண் மதிப்பின் மூலம் ஒவ்வொரு மாறியையும் மாற்றி எண் கோவைகளைப் பெறவேண்டும்.
படி 3: BIDMAS முறை மூலம் எண்கணித வெளிப்பாட்டைத் தீர்க்க அல்லது எளிமைப்படுத்த முயற்சிக்கவும்.
படி 4: எளிமைப்படுத்திய எண் கோவையைக் கணக்கிட்டால் கிடைக்கும் விடையே, இயற்கணிதக்கோவையின் விடை.
Example:
1) இயற்கணிதக்கோவை மற்றும் m, n ன் மதிப்புகள் m= 12 and n= 4.
கொடுக்கப்பட்டுள்ள மதிப்புகளை மாறிக்கு பதிலாக உள்ளிடவும்.
எனவே, இயற்கணிதக் கோவையின் மதிப்பு = 112.
2) என்ற இயற்கணிதக் கோவையை மதிப்புகள் m = 12 மற்றும் n= 4 வைத்து கணக்கிடுக.
கொடுக்கப்பட்டுள்ள மதிப்புகளை மாறிக்கு பதிலாக உள்ளிடவும்.
எனவே, இயற்கணிதக் கோவையின் மதிப்பு = 84.
3) என்ற இயற்கணிதக் கோவையை மதிப்புகள் m = 12 மற்றும் n = 4.
கொடுக்கப்பட்டுள்ள மதிப்புகளை மாறிக்கு பதிலாக உள்ளிடவும்.
எனவே, இயற்கணிதக் கோவையின் மதிப்பு = 147.