PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
பாகைமானியைப் பயன்படுத்தாமல் அளவுகோல் மற்றும் கவராயத்தைப் பயன்படுத்தி கோணங்களை வரைதல்.
 
(i) \(60°\) அளவுடைய கோணத்தை வரைதல்
 
படி 1:
 
ஒரு நேர்க்கோடு வரைந்து, அதன் மீது \(A\) என்ற புள்ளியைக் குறிக்கவும்.
 
figure7w498png.png
 
படி 2:
 
\(A\) ஐ மையமாகக் கொண்டு ஏதேனும் ஒரு ஆரத்தில் நேர்க்கோட்டை வெட்டுமாறு ஒரு வட்டவில் வரைக. நேர்க்கோட்டை வெட்டும் புள்ளியை \(B\) எனக் குறிக்கவும்.
 
figure8w499png.png
 
படி 3:
 
\(B\) ஐ மையமாகக் கொண்டு, அதே அளவு ஆரத்துடன் முன்பு வரைந்த வட்டவில்லை வெட்டுமாறு மற்றொரு வட்டவில்லை வரைக. வெட்டும் புள்ளியை \(C\) எனக் குறிக்கவும்.
 
figure9w500png.png
 
படி 4:
 
\(AC\) ஐ இணைக்கவும். \(\angle BAC\) என்பது \(60^\circ\) அளவுடைய கோணமாகும்.
 
figure10w500png.png
 
 
(ii) \(135°\) அளவுடைய கோணத்தை வரைதல்
 
படி 1:
 
ஒரு நேர்க்கோடு வரைந்து, அதன் மீது \(A\) என்ற புள்ளியைக் குறிக்கவும்.
 
C_44.png
 
படி 2:
 
\(A\) ஐ மையமாகக் கொண்டு ஏதேனும் ஒரு ஆரத்தில் நேர்க்கோட்டை வெட்டுமாறு ஒரு வட்டவில் வரைக. நேர்க்கோட்டை வெட்டும் புள்ளியை \(B\) எனக் குறிக்கவும்.
 
C_45.png
 
படி 3
 
\(B\) ஐ மையமாகக் கொண்டு, அதே அளவு ஆரத்துடன் முன்பு வரைந்த வட்டவில்லை வெட்டுமாறு மற்றொரு வட்டவில்லை வரைக. வெட்டும் புள்ளியை \(C\) எனக் குறிக்கவும். \(C\) ஆனது \(60^\circ\) ஆகும்.
 
C_46.png
 
படி 4
 
\(C\) ஐ மையமாகக் கொண்டு, அதே அளவு ஆரத்துடன் முன்பு வெட்டிய வில்லை வெட்டுமாறு மற்றொரு வட்டவில்லை வரைக. வெட்டும் புள்ளியை \(D\) எனக் குறிக்க. \(D\) ஆனது \(120^\circ\) ஆகும்.
 
C_47.png
 
படி 5
 
\(D\) ஐ மையமாகக் கொண்டு, அதே அளவு ஆரத்துடன் முன்பு வெட்டிய வில்லை வெட்டுமாறு மற்றொரு வட்டவில்லை வரைக. வெட்டும் புள்ளியை \(E\) எனக் குறிக்க. \(E\) ஆனது \(180^\circ\) ஆகும்.
 
C_48.png
 
படி 6:
 
\(D\) \((120°)\) மற்றும் \(E\) \((180°)\) புள்ளிகளுக்கிடையில் கோண இருசமவெட்டி வரைக. அவ்வெட்டும் புள்ளியானது \((F)\), \(150°\) ஆகும்.
 
C_54.png
 
படி 7:
 
\(D\) \((120°)\) மற்றும் \(G\) \((150°)\) புள்ளிகளுக்கிடையில் கோண இருசமவெட்டி வரைக. வெட்டும் புள்ளியை \(H\) எனக் குறிக்கவும். \(\angle BAH = 135°\) ஆகும்.
 
C_55.png
 
\(135°\) கோணத்தை அளவுகோல் மற்றும் கவராயத்தைப் பயன்படுத்தி வரைதல்.