PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
செங்கோண முக்கோணம்:
ஒரு முக்கோணத்தின் ஏதேனும் ஒரு கோணம் \(90^\circ\) எனில் அந்த முக்கோணம் செங்கோண முக்கோணம் ஆகும்.
Figure 13.png
 
செங்கோணத்திற்கு எதிரேயுள்ள பக்கமே அதிக நீளமுடையதாக உள்ளது.
 
கர்ணம்:
செங்கோண முக்கோணத்தில் மிக நீண்ட பக்கம் கர்ணம் ஆகும்.
  
மேற்கண்ட முக்கோணங்களில் \(BC\), \(QR\) மற்றும் \(ZY\) அகியன கர்ணம் ஆகும்.
செங்கோணம்-கர்ணம்-பக்கம் கொள்கை (செ-க-ப):
ஒரு செங்கோண முக்கோணத்தின் கர்ணமும், ஒரு பக்கமும் மற்றொரு செங்கோண முக்கோணத்தின் கர்ணத்திற்கும் ஒரு பக்கத்திற்கும் சமமாக இருந்தால் அவ்விரு செங்கோண முக்கோணங்களும் சர்வசமம் ஆகும்.
Example:
YCIND_221019_4589_TM7_Triangles_Tamil medium_32.png
 
மேற்கண்ட முக்கோணம் \(ABC\) மற்றும் \(PQR\) இல் \(AB = PQ = 12\) செ.மீ மற்றும் கர்ணம் \(BC = QR = 13\) செ.மீ.
 
எனவே, \(ABC\) மற்றும் \(PQR\) ஆகியன சர்வசம முக்கோணம் ஆகும்.
Important!
கர்ணம் செங்கோண முக்கோணத்தில் மட்டுமே அமையும்.
 
செ-க-ப கொள்கையை செங்கோண முக்கோணத்தில் மட்டுமே பயன்படுத்த முடியும்.