PDF chapter test TRY NOW

வட்டம் வரைதல்:
 
வட்டமானது அதன் ஆரத்தின் அடிப்படையில் வரையப்படும்.
 
ஒரு வேளை கணக்கில் வட்டத்தின் விட்டம் கொடுத்தால் அதனை ஆரமாக மாற்றி வட்டம் வரைய வேண்டும்.
Example:
\(3\) செ.மீ ஆரமுள்ள வட்டம் வரைக.
 
வரைமுறை:
 
படி 1: தாளில் ஒரு புள்ளியைக் குறித்து \(O\) எனப் பெயரிடுக.
 
படி 2 : \(3\) செ.மீ அளவுள்ளவாறு கவராயத்தை அமைக்கவும்.
 
படி 3 : கவராயத்தின் கைப்பிடி முனையை உறுதியாகப் பிடித்துக் கொண்டு அதன் உலோக முனையை வட்டத்தின் மையம் \(O\) வில் அமைக்க.
 
படி 4 : வரைகோல் வட்டத்தை முழுமையாக வரையும் வகையில் கவராயத்தை மெதுவாகச் சுற்றினால் தேவையான வட்டம் கிடைக்கும்.
 
Construction-of-a-circle.gif