
PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoவர்க்க எண்கள் என்றால் என்ன?
ஒரு இயல் எண்ணை அதே எண்ணோடு பெருக்கினால் கிடைக்கும் எண்ணே வர்க்க எண்கள் ஆகும்.
எடுத்துக்காட்டு:
புகைப்பட எடுத்துக்காட்டு:
கொடுக்கபட்டுள்ள புகைப்படத்தை நன்றாக பார்க்கவும்.

மேலே கொடுக்கப்பட்டதில் 1 கிடைமட்ட வரிசை 1 நெடுவரிசை உள்ளது.
இரண்டாவது 2 கிடைமட்ட வரிசை 2 நெடுவரிசை உள்ளது.
மூன்றாவது 3 கிடைமட்ட வரிசை 3 நெடுவரிசை உள்ளது.
நான்காவது 4 கிடைமட்ட வரிசை 4 நெடுவரிசை உள்ளது.
1 மடங்கு 1 = 1^2 = 1
2times2 = 2^2 = 4
3times3 = 3^2 = 9
4times4 = 4^2 = 16
இதில் 1, 4, 9, 16 ஆகிய எண்கள் வர்க்க எண்கள் ஆகும்.
ஓர் இயல் எண் n ஐ, மற்றொரு இயல் m ஐக் கொண்டு n = m^2 என்றிருக்குமாறு காண இயலும் எனில், n ஆனது ஓர் வர்க்க எண் எனப்படும்.