PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoகழித்தலின் சுழற்சி முறையை பயன்படுத்தி வர்க்க எண்களைக் கண்டறிதல்:
வர்க்க எண்களை நாம் தொடர்ச்சியான ஒற்றை படை எண்களாக எழுத முடியும்.தொடர்ச்சியான ஒற்றை படை எண் \(1\) இல் இருந்து ஆரம்பம் ஆகும்.
வர்க்க மூலத்தை கணக்கிட நாம் ஒற்றை படை எண்களை கழித்தலின் சுழற்சி முறையில் பயன்படுத்தி பூச்சியம் கிடைக்கும் வரை பயன்படுத்த வேண்டும்.
ஒரு இடத்தில் நமக்கு பூச்சியம் கிடைக்கும் அப்பொழுது நமக்கு வர்க்க எண் கிடைத்து விடும்.
பூச்சியம் கிடைக்கவில்லை என்றால் கொடுக்கப்பட்டுள்ள எண் முழு வர்க்க எண் ஆகாது.
எடுத்துக்காட்டு:
Example:
கொடுத்த எண் \(49\) விற்கு கழித்தலின் சுழற்சி முறைப்படி வர்க்க எண் :
விடை:
கொடுத்த எண் \(49\).
\(49\)என்ற எண்ணிற்கு கழித்தலின் சுழற்சி முறைப்படி வர்க்க எண் கண்டுப்பிடிக்க வேண்டும்
படி 1: \(49 - 1 = 48\)
படி 2: \(48 - 3 = 45\)
படி 3: \(45 - 5 = 40\)
படி 4: \(40 - 7 = 33\)
படி 5: \(33 - 9 = 24\)
படி 6: \(24 - 11 = 13\)
படி 7: \(13 - 13 = 0\)
இங்கே \(7^{\text{வது}}\) படியில் பூச்சியம் கிடைத்து விட்டது. எனவே \(\sqrt{49} = 7\).
ஆதலால் எண் \(49\)வின் வர்க்க மூலம் \(7\) ஆகும்.
எண் \(15876\) வை கழித்தலின் சுழற்சி முறைப்படி வர்க்க மூலம் கண்டுப்பிடிக்க முடியுமா?
முடியும் ஆனால் இதைபோல் \(15876\) பெரிய எண்ணிற்கு இந்த முறைப்படி செய்தால் அதிக நேரம் எடுக்கும் அதனால் சிறிய எண்ணிற்கு இந்த முறையை பயன்படுத்திக் கொள்ளலாம்.
பகா காரணி, நீள் வகுத்தல் மூலமாகவும் நாம் வர்க்க மூலத்தை கண்டறியலாம்.