PDF chapter test TRY NOW

குழந்தைகள் தின கொண்டாட்டத்தில், மது குழந்தைகளுக்கு இருக்கை ஏற்பாடு செய்தார்.
 
சூழ்நிலை \(1\): '\(x\)' எண்ணிக்கையில் வரிசைகள் மற்றும் '\(y\)' எண்ணிக்கையில் நெடுவரிசைகள் உள்ளன. ஏற்பாடு செய்யக்கூடிய நாற்காலிகளின் எண்ணிக்கை இரண்டு மாறிளிகளைக் கொண்டு வெளிப்படுத்தப்படும்.(பெருக்கல் பலன்).
 
அதாவது \(x×y\).
 
இதனால், மது உட்கார ஏற்பாடு செய்யப்பட்ட நாற்காலிகளின் எண்ணிக்கை \(x×y\).
 
சூழ்நிலை \(2\): '\(x\)' எண்ணிக்கையில் வரிசைகள் மற்றும் y2+2y எண்ணிக்கையில் நெடுவரிசைகள் உள்ளன என்று வைத்துக்கொள்வோம். ஏற்பாடு செய்யக்கூடிய நாற்காலிகளின் எண்ணிக்கை இரண்டு பல்லுறுப்புக் கோவைகளின் பெருக்கலாக வெளிப் படுத்தப்படும்.
 
அதாவது \(x×\)(y2+2y).
 
ஆக, மது அமருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்ட நாற்காலிகளின் எண்ணிக்கை \(x×\)(y2+2y).
 
இந்த வகையான சூழ்நிலைகளின் இறுதி முடிவைப் பெற, நாம் இரண்டு இயற்கணித வெளிப்பாடுகளை பெருக்க கற்றுக்கொள்ள வேண்டும்.
 
இரண்டு இயற்கணித வெளிப்பாடுகளைப் பயன்படுத்தி பெருக்கல் செய்வது எப்படி என்பதைக் கற்றுக்கொள்வோம்.
Important!
இரண்டு இயற்கணிதக் கோவைகளை  அடைப்புக்குறி \(()\), புள்ளி\((.)\), பெருக்கல் குறி \(×\) என்ற குறியீட்டால் குறிக்கப்படுகிறது.