PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
இந்தப் பெருக்கத்தில், முதல் பல்லுறுப்புக் கோவையில் உள்ள ஒவ்வொரு உறுப்பையும்  இரண்டாவது பல்லுறுப்புக் கோவையில் உள்ள ஒவ்வொரு உறுப்போடு பெருக்க வேண்டும்.
Important!
பல்லுறுப்புக் கோவைகளை பெருக்கும் போது ஒத்த உறுப்புகளைத் தெரிவு செய்து ஒன்றாக பிரித்து எழுதிக்கொள்ள வேண்டும். பின் அதன் மாறிகளை அதிகாரத்தின் அடிப்படையில் பெருக்கி, எண்கெழுக்களைப் பெருக்க வேண்டும்.
Example:
ஒரு மூவுறுப்புக் கோவை \(a+b−c\) மற்றும் ஒரு பல்லுறுப்புக் கோவை \(2a−3b+5c\)ஐ எடுத்துக் கொள்வோம்.

மூவுறுப்புக் கோவை \(a+b−c\) ஐ, ஒரு பல்லுறுப்புக் கோவை \(2a−3b+5c\) ஆல் பெருக்கலாம்.

முதல் பல்லுறுப்புக் கோவை \(a+b−c\) இல் உள்ள ஒவ்வொரு உறுப்புகளையும் இரண்டாவது பல்லுறுப்புக் கோவை \(2a−3b+5c\) இல் உள்ள ஒவ்வொரு உறுப்புகளாலும்  பெருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும்.
 
a+bc×2a3b+5c
 
=a×2a+a×3b+a×5c+b×2a+b×3b+b×5c+c×2a+c×3b+c×5c
 
=2a23ab+5ac+2ab3b2+5bc2ac+3bc5c2
 
=2a23b25c2ab+8bc+3ac.