PDF chapter test TRY NOW

நேர்க்கோடுகள் மற்றும் அவற்றின் வகைகளைப் பற்றி காணலாம்.
கோடுகளின் வகைகள்:
1. வெட்டும் கோடுகள்: ஒரு தளத்தில் இரு நேர்க்கோடுகள் ஒன்றையொன்று சந்தித்துக் கொள்ளும்பொழுது, அவை வெட்டும் கோடுகள் என அழைக்கப்படுகிறது.
 
\(a_1\) மற்றும் \(a_2\) என்ற கோடுகள் \(P\) என்ற புள்ளியில் கீழ்கண்ட படத்தில் வெட்டுகின்றன எனவே, \(P\) என்பது வெட்டும் புள்ளி ஆகும்.
 
1280_1.svg
 
  
2. ஒருபுள்ளி வழிச்செல்லும் கோடுகள்: மூன்று அல்லது அதற்கு மேற்பட்டக் கோடுகள் ஒருபுள்ளி வழியாகச் செல்கின்றன எனில், அவை ஒருபுள்ளி வழிச் செல்லும் கோடுகள் எனப்படும்.
 
கீழ்கண்ட வரைபடத்தில், \(a_1\), \(a_2\), மற்றும் \(a_3\) ஆகிய கோடுகள் \(P\) என்ற புள்ளி வழிச் செல்கின்றன. எனவே,  \(a_1\), \(a_2\), மற்றும் \(a_3\) ஒரு புள்ளி வழிச் செல்லும் கோடுகள் ஆகும்.
 
1280_2.svg
 
  
3. செங்குத்து கோடுகள்: இரு நேர்க்கோடுகள் ஒன்றை ஒன்று \(90\circ\) கோணத்தில் வெட்டிக்கொண்டல் அவைகளைச் செங்குத்து கோடுகள் எனலாம்.
 
கீழ்கண்ட படத்தில் \(a_1\) மற்றும் \(a_2\) என்பன \(90\circ\) கோணத்தில் ஒன்றை ஒன்று வெட்டிக் கொள்கின்றன. எனவே, இவை செங்குத்து கோடுகள் ஆகும்.
 
இதனைக் குறியீட்டில் \(a_1 \perp a_2\) எனக் குறிப்பிடலாம்.
 
1280_3.svg
 
  
4. இணை கோடுகள்: இரு நேர்க்கோடுகள் ஒன்றை ஒன்று ஒருபோதும் சந்திக்கவில்லை என்றால் அவை இணைகோடுகள் ஆகும்.
 
கீழ்கண்ட வரைபடத்தில், \(a_1\) மற்றும் \(a_2\) என்பன ஒருபோதும் சந்தித்துக்கொள்ளாது. எனவே, இவை இணைகோடுகள் ஆகும்.
 
இதனைக் குறியீட்டில் \(a_1 \parallel a_2\) எனக் குறிப்பிடலாம்.
 
1280_4.svg