PDF chapter test TRY NOW
தகு உட்கணம் (Proper subset)
A மற்றும் B இரு கணங்கள் என்க. கணம் A இல் உள்ள அனைத்து உறுப்புகளும் B இல் இருக்க வேண்டும். ஆனால், B இல் குறைந்தபட்சம் ஒரு உறுப்பாவது A ஐ விட அதிகமாக இருக்க வேண்டும் (A ≠ B). இவ்வாறு உள்ள கணம் தகு உட்கணம் எனப்படும். இதை A \subset B என எழுதலாம்.

Example:
A = \{2, 7, 8, 9\} மற்றும் B = \{2, 5, 7, 8, 9, 10\}
\{2, 7, 8, 9\} \subset \{2, 5, 7, 8, 9, 10\}
A \subset B
அடுக்குக் கணம் (Power Set):
A என்ற கணத்தின் அனைத்து உட்கணங்களையும் கொண்ட கணம், அக்கணத்தின் அடுக்குக் கணம் எனப்படும். இதனை P(A) எனக் குறிக்கலாம்.
Example:
A = \{3, 5\} எனில் A இன் அடுக்குக் கணத்தைக் காண்க.
A இன் உட்கணங்கள் \{\}, \{3\}, \{5\}, \{3, 5\}.
A இன் அடுக்குக் கணம், P(A) = \{\{\}, \{3\}, \{5\}, \{3, 5\}\}.
Important!
1. n(A) \le n [P(A)]
2. n(A) = m எனில், உட்கணங்களின் எண்ணிக்கை n [P(A)] = 2^m.
3. கணம் A இன் தகு உட்கணங்களின் எண்ணிக்கை n [P(A)] - 1= 2^m - 1.