PDF chapter test TRY NOW

\(p(x)\) என்ற பல்லுறுப்புக் கோவையில் \(x=a\) எனப் பிரதியிட, அதன் மதிப்பு \(p(a)\) என கிடைக்கும். இது  \(x\) ஐ  \(a\) என மாற்றுவதால் கிடைக்கும்  (\(a∈R\)).
Example:
\(x = 3\) எனும்போது \(p(x) = x^2+2x-1\)-ன் மதிப்புக் காண்க.
 
\(x = 3\) எனும்போது \(p(x)\)-ன் மதிப்புக் காண \(x = 3\) என \(p(x)\)-ல் பிரதியிட வேண்டும்.
 
\(x = 3\) என \(p(x)\)-ல் பிரதியிட கிடைப்பது,
 
\(p(3) = \)\(3^2+2(3)-1\)
 
\(=9+6-1\)
 
\(=14\).
பல்லுறுப்புக் கோவையின் பூச்சியம்: \(p(x)\) என்ற பல்லுறுப்புக் கோவையில் , \(p(a) = 0\) எனில்  \(x = a\) என்பது பல்லுறுப்புக் கோவையின் பூச்சியம் ஆகும்.
பல்லுறுப்புக் கோவையின் பூச்சியம் காணல்: \(p(x)\) என்ற பல்லுறுப்புக் கோவையின் பூச்சியம் காண, \(p(x) =\) \(0\) என பிரதியிட வேண்டும்.
    Example:
    i. \(p(x)=3a\) என எடுத்துக்கொள்வோம்.
     
     \(p(x) = 0\) என பிரதியிட,
     
    0 = 3a.0/3 =a0=a
     
    எனவே, \(p(a)=3a\) என்ற பல்லுறுப்புக் கோவையின் பூச்சியம் \(a=0\).
     
     
    ii.p(x)=x2 என்ற பல்லுறுப்புக் கோவையை எடுத்துக்கொள்வோம்
     
    \(p(x) = 0\) என பிரதியிட,
     
    0=x2x=2
     
    p(x)=x2 என்ற பல்லுறுப்புக் கோவையின் பூச்சியம் \(x=2\).
Important!
ஒரு பல்லுறுப்புக் கோவையின் பூச்சியம் என்பது பூச்சியமாக மட்டுமே இருக்க வேண்டியதில்லை எந்த ஒரு மெய்யெண்ணாகவும் இருக்கலாம்.
 
ஒரு பூச்சியமற்ற மாறிலிப் பல்லுறுப்புக் கோவைக்கு பூச்சியங்கள் இல்லை.
 
பூச்சிய பல்லுறுப்புக் கோவையில் அனைத்து மெய்யெண்களும் பூச்சியங்கள் ஆகும்.