
PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoமீப்பெரு பொது வகுத்தி:
இரண்டு அல்லது அதற்க்கு மேற்பட்ட பல்லுறுப்புக் கோவைகளின் மீப்பெரு பொது வகுத்தியானது(மீ.பொ.வ) அதன் பொது காரணிகளுள் அதிகபட்சப் பொதுப்படியைக் கொண்ட ஒரு பல்லுறுப்புக் கோவையாகும். இதுவே மீப்பெரு பொது காரணி ஆகும்.
12xyz மற்றும் 3x என்ற பல்லுறுப்புக் கோவையை எடுத்துக்கொள்வோம்
இங்கு,12 மற்றும் 3 என்ற பல்லுறுப்புக் கோவையின் கெழுக்கள் 3.
எனவே, எண்களின் மீ.பொ.வ 3.
மேலும், xyz மற்றும் x இன் பொது காரணி x
எனவே, 12xyz மற்றும் 3x \text{மீ.பொ.வ} 3x ஆகும்.
காரணிப்படுத்துதலின் மூலம் மீ.பொ.வ காண வழிமுறைகள்:
- கொடுக்கப்பட்ட ஒவ்வொரு கோவையையும் காரணிகளின் பெருக்கற்பலனாக எழுதவும்.
- வகுக்கும் கோவைகளின் பொதுவான உயர் படி கொண்ட கோவையே மீ.பொ.வ ஆகும்.
- கோவைகளின் கெழுக்கள் எண்களாக இருப்பின், அவற்றின் மீ.பொ.வ கண்டறிந்து அதைக் கோவைகளின் மீ.பொ.வ வுடன் பெருக்க வேண்டும்.