PDF chapter test TRY NOW

பெரியாரைத் துணைக்கோடல் (45)
 
அரியவற்றுள் எல்லாம் அரிதே பெரியாரைப் 
பேணித் தமராக் கொளல்.
 
பொருள்:
 
கிடைத்தற்கரிய பேறுகளுள் எல்லாம் பெரும்பேறு பெரியோரைப் போற்றித் துணையாக்கிக் கொள்ளுதல் ஆகும்.
 
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன 
கெடுப்பார் இலானும் கெடும்.
 
பொருள்:
 
குற்றங் கண்டபொழுது இடித்துக் கூறும் பெரியாரைத் துணைக்கொள்ளாத பாதுகாப்பற்ற மன்னன், பகைவர் இன்றியும் தானே கெடுவான்.
 
பல்லார் பகைகொளலின் பத்தடுத்த தீமைத்தே
நல்லார் தொடர்கை விடல். 
 
பொருள்:
 
தானொருவனாக நின்று பலரோடு பகைமேற்கொள்வதைக் காட்டிலும் பல மடங்கு தீமையைத் தருவது நற்பண்புடையோரின் நட்பைக் கைவிடுதலாகும்.
 
கொடுங்கோன்மை (56)
 
வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்
கோலொடு நின்றான் இரவு.
 
பொருள்:
 
ஆட்சியதிகாரத்தைக் கொண்டுள்ள அரசன் தன் அதிகாரத்தைக் கொண்டு வரிவிதிப்பது, வேல் போன்ற ஆயுதங்களைக் காட்டி வழிப்பறி செய்வதற்கு நிகரானதாகும்.
 
அணி:உவமையணி
 
நாள்தொறும் நாடி முறைசெய்யா மன்னவன்
நாள்தொறும் நாடு கெடும்.
 
பொருள்:
 
தன் நாட்டில் நிகழும் நன்மை தீமைகளை ஒவ்வொரு நாளும் ஆராய்ந்து ஆட்சி செய்யாத மன்னவன், தன் நாட்டை நாள்தோறும் இழக்க நேரிடுவான்.