PDF chapter test TRY NOW

ஒழுக்கமுடைமை (14)
 
ஒழுக்கம் ஒழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.
 
பொருள்:
 
ஒழுக்கம் எல்லார்க்கும் சிறப்பைத் தருவதால் அவ்வொழுக்கத்தை உயிரினும் மேலானதாகப் பேணிக் காக்க வேண்டும்.
 
ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை; இழுக்கத்தின்
எய்துவர் எய்தாப் பழி.
 
பொருள்:
 
ஒழுக்கமாக வாழும் எல்லாரும் மேன்மை அடைவர். ஒழுக்கம் தவறுபவர் அடையக்கூடாத பழிகளை அடைவர்.
 
உலகத்தோ டொட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்.
 
பொருள்:
 
உலகத்தோடு ஒத்து வாழக் கல்லாதார், பலநூல்களைக் கற்றாராயினும் அறிவு இல்லாதவரே (எனக் கருதப்படுவார்).
 
மெய் உணர்தல் (36)
 
எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.
 
பொருள்:
 
எந்தப் பொருள் எந்த இயல்பினதாகத் தோன்றினாலும் அந்தப் பொருளின் உண்மை பொருளைக் காண்பதே அறிவாகும்.
 
காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன் 
நாமம் கெடக்கெடும் நோய்.
 
பொருள்:
 
ஆசை, சினம், அறியாமை என்ற மூன்றும் அழிந்தால் அவற்றால் வரும் துன்பமும் அழியும்.