PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoசொல்
ஓர் எழுத்து தனித்தோ, பல எழுத்துகள் சேர்ந்தோ பொருள் தரும் வகையில் அமைவது சொல் ஆகும்.
எ.கா.
பூ , ஆ , தீ , வா , போ , தா
' பூ மலர்ந்தது ' ' மாடு புல் தின்றது '
மேலே உள்ள எடுத்துக்காட்டில் தனி எழுத்தும், பல எழுத்துகள் சேர்ந்த வந்த சொல்லும் உள்ளன. இவை பொருள் தருகிறதல்லவா? இந்தச் சொல்லானது ,
இரு திணைகளையும், ஐந்து பால்களையும் குறிக்கும்.
இரு திணை- உயர் திணை, அஃறிணை
ஐம்பால் - ஆண்பால் , பெண்பால் , பலர்பால், ஒன்றன் பால் , பலவின்பால் .
மூவிடங்களிலும்வரும். தன்மை , முன்னிலை , படர்க்கை.
உலக வழக்கிலும்( பேச்சு வழக்கு ), செய்யுள் வழக்கிலும் வரும்.
வெளிப்படையாகவும்,குறிப்பாகவும் விளங்கும்.
மூவகை மொழி
1) தனிமொழி
2) தொடர்மொழி
3)பொதுமொழி
ஒருமொழி ஒருபொரு ளனவாம் தொடர்மொழி பலபொருளனபொது இருமையும் ஏற்பன. (நன்னூல் - 260)
1) தனிமொழி :
ஒரு சொல் தனித்து நின்று பொருள் தருமாயின் அது தனிமொழி எனப்படும்.
பிரிக்க முடியாத பகாப்பதம் அல்லது பிரிக்கக் கூடிய பகுபதமாக இது அமையும்.
எ.கா.
கண் , படி - பகாப்பதம்
கண்ணன் , படித்தான் - பகுபதம்
2) தொடர்மொழி :
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தனிமொழிகள் தொடர்ந்து வந்து பொருள் தருவது தொடர்மொழி ஆகும்.
எ.கா . கண்ணன் வந்தான். மலர் வீட்டுக்குச் சென்றாள்.
3) பொதுமொழி :
ஒரு சொல் தனித்து நின்று ஒரு பொருளையும், அச்சொல்லே பிரிந்து நின்று வேறு பொருளையும் தந்து தனிமொழிக்கும், தொடர்மொழிக்கும் பொதுவாய் அமைவது பொதுமொழி எனப்படும்.
எ.கா.
எட்டு - எட்டு என்ற எண்ணைக் குறிக்கும்
வேங்கை - வேங்கை என்னும் மரத்தைக் குறிக்கும்.
இவையே எள் + து எனவும் ,
வேம் + கை எனவும்
தொடர்மொழிகளாகப் பிரிந்து நின்று எள்ளை உண், வேகின்ற கை எனவும் பொருள் தரும்.
இவை இரு பொருள்களுக்கும் பொதுவாய் அமைவதால் பொது மொழியாகவும் இருக்கிறது.