PDF chapter test TRY NOW
4.ஒற்றளபெடை :

இலங்ங்கு, வெஃஃகுவாா்க்கில்லை.
மேற்கண்ட சொற்களில் ஒரே மாதிரியான இரண்டு ஒற்றுகள் (மெய் / ஆய்த எழுத்துகள்) இடம் பெற்றுள்ளதைக் கவனிக்கவும்.
இதனை ஒற்று அளபெடுத்துள்ளது என்று கூறுவர்.
எழுத்து என்னும் பகுதியில் பயின்ற மெய் எழுத்துகளை நாம் இங்கு நினைவு கூர்வோம்.
மெய் எழுத்துகள் - 18. ஒலிக்கும் மாத்திரை அளவு அரை (1/2).

இம்மெய் எழுத்துகளை மூன்று இனங்களாகப் பிரிப்பர்.
வல்லினம் (6) மெல்லினம் (6) இடையினம் (6)

செய்யுளில் ஓசை குறையும் போது அவ்வோசையை நிறைவு செய்ய கீழ்க்காணும் மெய் எழுத்துகள் 10, ஆய்தம் 1 ஆகிய பதினொன்று எழுத்துகள் மட்டும் அளபெடுக்கும்.
ஆய்த எழுத்து ஒலிக்கும் மாத்திரை அளவு அரை (1/2).
அஃகேனம் (ஃ) - மெய் எழுத்து அல்லது ஒற்று எழுத்தாகக் கருதப்படும்.
பதினொன்று ஒற்று எழுத்துகள் அளபெடுக்கும் இடங்கள் :
மெல்லினம் (6) இடையினம் (4)

ஆய்த எழுத்து ஃ (1) :
எஃஃகிலங்கிய, கலங்ங்கு
ஒரு குறில் அல்லது இரு குறில் எழுத்தை அடுத்தும், ஒரு சொல்லின் இடையிலும், இறுதியிலும் வருவது ஒற்றளபெடை.
ஒரு குறில் அல்லது இரு குறில் எழுத்தை அடுத்தும், ஒரு சொல்லின் இடையிலும், இறுதியிலும் வருவது ஒற்றளபெடை.