PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
திணை
 
திணை உயர்திணை, அஃறிணை என இருவகைப்படும்.
 
மக்கள், தேவர், நரகர் முதலியோர் ஆறறிவு படைத்தவர் ஆதலின் அவர் உயர்திணை ஆவர்.
 
இவர்களைத் தவிர்த்த உயிர் உள்ளவையும் இல்லாதவையும் அஃறிணையாகும்.
 
மக்கள் தேவர் நரகர் உயர்திணை
மற்றுயிர் உள்ளவும் இல்லவும் அஃறிணை
(நன்னூல் :261)
 
பால்
 
ஆண்பால், பெண்பால், பலர்பால் என்னும் மூவகைப் பால்களும் உயர்திணைக்கு உரியன.
 
(எ.டு.) முருகன் - ஆண்பால் வள்ளி - பெண்பால் அறிஞர் - பலர்பால்
 
ஆண்பெண் பலரென முப்பால் உயர்திணை   (நன்னூல் : 262)
 
(எ.டு.) ஒன்றன்பால், பலவின்பால் என்பன அஃறிணைக்கு உரியன. மயில் - ஒன்றன்பால் கற்கள் - 
 
பலவின்பால் ஒன்றே பலவென்று இருபாற்று அஃறிணை   (நன்னூல் : 263)
  
காலம்
 
காலம் மூன்று வகைப்படும். அவை இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம்.
 
இறப்பெதிர்வு நிகழ்வெனக் காலம் மூன்றே    (நன்னூல் : 382)
 
இடம்
 
தன்மை, முன்னிலை, படர்க்கை என இடம் மூவகைப்படும்.
 
தன்னையும் தன்னைச் சார்ந்தவர்களையும் குறிப்பிடுவது தன்மை.
 
தனக்கு முன்னால் உள்ள ஒருவரையோ, பலரையோ குறிப்பிடுவது முன்னிலை, தன்மைக்கும் முன்னிலைக்கும் அயலாக உள்ளவற்றைக் குறிப்பிடுவது படர்க்கை.
 
(எ.டு.)
 
நான், நாம் - தன்மை
 
நீ, நீங்கள - முன்னிலை
 
அவன், அவள், அவர், அது, அவை - படர்க்கை
 
தன்மை முன்னிலை படர்க்கை மூவிடனே   (நன்னூல் : 266)