PDF chapter test TRY NOW
உரையாடலில் இடம்பெற்றுள்ள வினா விடை வகைகளைக் காண்போம். வினா விடை வகைகளைக் காண்போம்
பாமகள் : வணக்கம் ஆதிரை! ஏதோ எழுதுகிறீர்கள் போலிருக்கிறதே?
- அறியா வினா
ஆதிரை : ஆமாம்! கவியரங்கத்துக்குக் கவிதை எழுதிக்கொண்டிருக்கிறேன்.
- உற்றது உரைத்தல் விடை
பாமகள் : அப்படியா! என்ன தலைப்பு? - அறியா வினா
ஆதிரை : கல்வியில் சிறக்கும் தமிழர்! - நேர் விடை.
நீங்கள் கவியரங்கத்துக்கு எல்லாம் வருவீர்களோ? மாட்டீர்களோ? - ஐய வினா
பாமகள் : ஏன் வராமல்? - வினா எதிர் வினாதல் விடை
1.“காமராசர் நகர் எங்கே இருக்கிறது?”- அறியா வினா
2. “இந்த வழியாகச் செல்லுங்கள்”- சுட்டு விடை
3. இதோ… இருக்கிறதே! – சுட்டு விடை
4. “எனக்கு எழுதித் தருகிறாயா?” -ஏவல் வினா
5. “எனக்கு யார் எழுதித் தருவார்கள்- ஏவல் விடை