PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoஏவல் விடை
மாட்டேன் என்று மறுப்பதை ஏவுதலாகக் கூறும் விடை.
“இது செய்வாயா?” என்று வினவியபோது, ‘நீயே செய்’ என்று ஏவிக் கூறுவது
வினாவிற்கு விடையாக இன்னொரு வினாவைக் கேட்பது.
“என்னுடன் ஊருக்கு வருவாயா?” என்ற வினாவிற்கு, ‘வராமல் இருப்பேனா?’ என்று கூறுவது
உற்றது உரைத்தல் விடை
வினாவிற்கு விடையாக ஏற்கனவே நேர்ந்ததைக் கூறல்.
“நீ விளையாட வில்லையா?” என்ற வினாவிற்குக், ‘கால் வலிக்கிறது’ என்று உற்றதை உரைப்பது
உறுவது கூறல் விடை
வினாவிற்கு விடையாக இனிமேல் நேர்வதைக் கூறல்.
“நீ விளையாடவில்லையா?” என்ற வினாவிற்குக், ‘கால் வலிக்கும்’ என்று உறுவதைக் கூறுவது
இனமொழி விடை
வினாவிற்கு விடையாக இனமான மற்றொன்றை விடையாகக் கூறல்.
“உனக்கு கதை எழுதத் தெரியுமா?” என்ற வினாவிற்குக் “கட்டுரை எழுதத் தெரியும்” என்று கூறுவது.