PDF chapter test TRY NOW
மாணவி 2 : எற்பாடு என்றால்...
'தமிழாசிரியர்: 'எல்' என்றால் ஞாயிறு, ''பாடு' என்றால் மறையும் நேரம். எல்+பாடு : எற்பாடு.
மாணவி 1: ஐந்து நிலங்கள் இருக்கின்றன அனைத்துக்கும் பொழுது ஒன்றுபோல வருமா அம்மா?
தமிழாசிரியர் : நல்ல வினா. ஒவ்வொரு நிலத்திற்கும் பெரும்பொழுதும் சிறுபொழுதும் ஒன்றுபோல வாரா.
மாணவி 2 : கருப்பொருள் என்றால் என்ன அம்மா?
திணையும் பொழுதும் | ||
திணை | பெரும்பொழுது | சிறுபொழுது |
குறிஞ்சி | குளிர்காலம், முன்பனிக்காலம் | யாமம் |
முல்லை | கார்காலம் | மாலை |
மருதம் | ஆறு பெரும்பொழுதுகள் | வைகறை |
நெய்தல் | ஆறு பெரும்பொழுதுகள் | எற்பாடு |
பாலை | இளவேனில், முதுவேனில், பின்பனி | நண்பகல் |
தமிழாசிரியர் : ஒரு நிலத்தின் தெய்வம், மக்கள், தொழில், விலங்கு இவையெல்லாம் கருப்பொருள்கள். குறிஞ்சி நிலமிருக்கிறதல்லவா?
மாணவிகள்: ஆம் அம்மா!