PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoதமிழாசிரியர் :
குறிஞ்சி நிலத்திற்குத் தெய்வம் இருக்கும். மக்கள் இருப்பர். உணவு இருக்கும். இதேபோல ஒவ்வொரு நிலத்திற்கும் தனித்தனியே தெய்வம் முதலாகத் தொழில் வரையில் தனித்தனியே இருக்கும். கவிதையில் உரிப்பொருளை இக்கருப்பொருள் பின்னணியில் அமைத்துப் பாடுவது நம் மரபு.
ஒரு அட்டவணை தருகிறேன். நீங்கள் அதை வைத்துப் பார்த்துக் கொள்ளுங்கள்.
மாணவிகள் :
அகப்பொருள் பற்றிய அடிப்படைகளைத் தெரிந்துகொண்டோம். நன்றி அம்மா.
கருப்பொருள் | குறிஞ்சி | முல்லை | மருதம் | நெய்தல் | பாலை |
தெய்வம் | முருகன் | திருமால் | இந்திரன் | வருணன் | கொற்றவை |
மக்கள் | வெற்பன், குறவர், குறத்தியர் | தோன்றல், ஆயர், ஆய்ச்சியர் | ஊரன், உழவர், உழத்தியர் | சேர்ப்பன், பரதன், பரத்தியர் | எயினர், எயிற்றியர் |
உணவு | மலைநெல், தினை | வரகு, சாமை | செந்நெல், வெண்ணெல் | மீன், உப்புக்குப் பெற்ற பொருள் | சூறையாடலால் வரும் பொருள் |
விலங்கு | புலி, கரடி, சிங்கம் | முயல், மான், புலி | எருமை, நீர்நாய் | முதலை, சுறா | வலியிழந்த யானை |
பூ | குறிஞ்சி, காந்தள் | முல்லை, தோன்றி | செங்கழுநீர், தாமரை | தாழை, நெய்தல் | குரவம், பாதிரி |
மரம் | அகில், வேங்கை | கொன்றை, காயா | காஞ்சி, மருதம் | புன்னை, ஞாழல் | இலுப்பை பாலை |
பறவை | கிளி, மயில் | காட்டுக்கோழி, மயில் | நாரை, நீர்க்கோழி, அன்னம் | கடற்காகம் | புறா,பருந்து |