PDF chapter test TRY NOW

பன்னிரண்டு திணை :
 
வெட்சிப் பூ வெட்சித் திணை ஆநிரை கவர்தல்
கரந்தைப் பூ கரந்தைத் திணை ஆநிரை மீட்டல்
வஞ்சிப் பூ வஞ்சித் திணை பகைவர் நாட்டைக் கைப்பற்றல்
காஞ்சிப் பூ காஞ்சித் திணை மாற்றரசனோடு எதிர்த்துப் போரிடல்
நொச்சிப் பூ நொச்சித் திணை  முற்றுகையிட்ட பகையரசனோடு போரிடுதல்
உழிஞைப் பூ உழிஞைத் திணை மாற்றரசனின் கோட்டையைக் கைப்பற்ற போரிடுதல்
தும்பைப் பூ தும்பைத் திணை போர்க்களத்தில் ஒருவரோடு ஒருவர் போரிடுதல்
வாகைப் பூ வாகைத் திணை போரிலே வெற்றி பெற்றவர் சூடுதல்
பாடு + ஆண் + திணை = பாடாண்  பாடாண் திணை தகுதியுடையவர்களைப் போற்றிப் பாடுவது
பொது பொதுவியல் வெட்சித் திணை முதல் பாடாண் திணை வரை - கூறப்படாததைக் கூறுதல். 
ஒருதலை கைக்கிளை ஒருதலைக் காமம்
பொருந்தா பெருந்திணை பொருந்தாக் காமம்