PDF chapter test TRY NOW

 
நொச்சிப் பூ
 
மருத நிலத்துக்குரிய நொச்சி, கொத்துக் கொத்தான நீலநிறப்பூக்கள் கொண்டது. இதில் மணிநொச்சி, கருநொச்சி, மலை நொச்சி வெண்ணெச்சி எனப் பலவகைகள் உள்ளன.
 
உழிஞைப் பூ
 
வேலிகளில் ஏறிப்படரும் நீண்ட கொடியே உழிஞைக் கொடி. இதன் கூட்டிமைகளும் மலர்களும் சிறியவை; மலர்கள் மஞ்சள் நிறத்தில் காணப்படும். இதனை முடக்கத்தான் (முடக்கொற்றான்) எனக் கூறுகின்றனர்.
 
தும்பைப் பூ
 
எல்லா இடங்களிலும் வளரக்கூடிய தூய வெண்ணிற மலர்களைக் கொண்ட சிறிய செடி தும்பை.
 
வாகைப் பூ
 
மங்கிய வெண்ணிற நறுமணம் கொண்ட கொத்துக் கொத்தாக மலரும் வாகை பூ.