PDF chapter test TRY NOW

எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை என்று ஆறு உறுப்புகளைக் கொண்டது யாப்பு.
 
வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என நான்கு வகை பாக்கள் உள்ளன.
 
யாப்பின் உறுப்புகள் குறித்துக் கடந்த ஆண்டில் கற்றதை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.
 
பாக்களுக்கு உரிய ஓசைகளைப் பற்றி முதலில் அறிந்துகொள்வோம்.
 
பாக்களை ஓசைகளைக் கொண்டே அறியலாம் .
 
ஒவ்வொரு பாவும் ஓசையால் வேறுபட்டது.
 
ஓசையானது செப்பல், அகவல், துள்ளல், தூங்கல் என்று நான்கு வகைப்படும்.
 
செப்பல் ஓசை
 
செப்பலோசை வெண்பாவிற்குரியது. அறம் கூறும், குறளும் நாலடியாரும் வெண்பாவில் அமைந்துள்ளன.
 
அகவல் ஓசை
 
அகவல் ஓசை ஆசிரியப்பாவுக்கு உரியது.
 
இலக்கணக் கட்டுக்கோப்புக் குறைவாகவும் கவிதை வெளியீட்டுக்கு எளிதாகவும் இருப்பது அகவற்பா என்னும் ஆசிரியப்பா.
 
சங்க இலக்கியங்களும் சிலப்பதிகாரம் , மணிமேகலை, பெருங்கதை ஆகிய காப்பியங்களும் அகவற்பாவில் அமைந்தவை.
 
துள்ளல் ஓசை
 
செய்யுளில் இடையிடையே உயர்ந்து வருவது துள்ளல் ஓசை. இது கலிப்பாவுக்கு உரியது.
 
தூங்கல் ஓசை
 
தூங்கல் ஓசை வஞ்சிப்பாவுக்கு உரியது.