PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoமுன் வகுப்பில் கற்ற ஏழு வகைத் தளைகளையும் நீங்கள் நினைவுகூர்தல் நல்லது.
பா வகைகள் குறள் வெண்பா, சிந்தியல் வெண்பா, நேரிசை வெண்பா, இன்னிசை வெண்பா, பஃறொடை வெண்பா என்று ஐந்துவகை வெண்பாக்கள் உள்ளன.
நேரிசை ஆசிரியப்பா, இணைக்குறள் ஆசிரியப்பா, நிலைமண்டில ஆசிரியப்பா, அடிமறி மண்டில ஆசிரியப்பா என்று நான்கு வகை ஆசிரியப்பாக்கள் உள்ளன.
இனி வெண்பா, ஆசிரியப்பா ஆகியவற்றின் பொது இலக்கணத்தை அட்டவணையில் காணலாம்.
பொது இலக்கணம் | வெண்பா | ஆசிரியப்பா (அகவற்பா) |
ஓசை | செப்பல் ஓசை பெற்று வரும் | அகவல் ஓசை பெற்று வரும் |
சீர் | ஈற்றடி முச்சீராகவும், ஏனைய அடிகள் நாற்சீராகவும் வரும். இயற்சீர், வெண்சீர் மட்டுமே பயின்று வரும். | ஈரசைச் சீர் மிகுதியாகவும், காய்ச்சீர் குறைவாகவும் பயின்று வரும். |
தளை | இயற்சீர்வெண்டளை, வெண்சீர் வெண்டளை மட்டும் பயின்று வரும். | ஆசிரியத் தளை மிகுதியாகவும் வெண்டளை, கலித்தளை ஆகியவை விரவியும் வரும். |
அடி | இரண்டடி முதல் பன்னிரண்டு அடி வரை அமையும். (கலிவெண்பா பதின்மூன்று அடிக்கு மேற்பட்டு வரும்.) | மூன்று அடி முதல் எழுதுபவர் மனநிலைக்கேற்ப அமையும். |
முடிப்பு | ஈற்றுச்சீர் நாள், மலர், காசு, பிறப்பு என்னும் வாய்பாட்டில் முடியும். | ஏகாரத்தில் முடித்தல் சிறப்பு. |